பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கரிப்பு மணிகள்

“இப்ப எங்களக்கூட அங்க காலி பண்ணிச் சொல்லி, யிருக்கா. ஏஜண்டு ஜபக்கூடம் எடுக்கப் போறாங்க, அந்த எடத்தில. காலிபண்ணணும்னு சொல்லி மாசமாகப் போவுது, நா மட்டுமில்ல. இங்க அளத்துல புள்ள பெத்துதே ஒரு பொம்பிள, அவ கூடத்தா, நாலு புள்ளங்களியும் வச்சிட்டு எங்க போவா? எல்லாம் அங்கேந்து இவுக வந்துதா வேலை செய்யிறாவ, அவியளுக்கும் இங்கே குடிச போட. எடம் தாரியளா?’

முதலாளி தங்கராசுவைப் பார்க்கிறார்.

  • அந்தாளு கண்ட்ராட்டு கூலியில்ல...’
  • கண்ட்ராட்டு...ஏனவிய கண்ட்ராட்டா இருக்கணும்? வருச வருசமா உதிரத்தைக் கொடுத்து உழய்க்கிறாங்க கண்ட்ராட்டுனு வைக்கிறது சரியா?”

“ஏலோ, இது என்னன்னு நினைச்ச? மொதலாளி யிட்டப் பேசுதே. மரி பாதி தவற வேணாம்?’ என்று. நாச்சப்பன் எச்சரிக்கிறான்.

ராமசாமி அவனை எரித்து விடுபவன்போல் பார்க் கிறான். -

‘நானும் முதலாளியும் பேசுகிறோம் எனக்குத் தெரியும். நீ ஏண்டா நடுவே வார, நாயே!”

நாச்சப்பன் எதிரொலி காட்டிருந்தால் ராமசாமி ஒரு வேளை கோபம் தணிந்தவனாகி இருக்கலாம். அவன் வாய். திறக்கவில்லை. மெளனம் அங்கே திரை விரிக்கிறது. ஒவ்வொரு விநாடியும் கனத்தைச் சுமந்து கொண்டு நகர இயலாமல் தவிக்கிறது. ராமசாமியின் குமுறல் படாரென்று வெடிக்கிறது.

“பாத்திக்காட்டுக்கு au” பொம்பிளயை மானங் குலைக்கும்...பன்னிப் பயல்... ஒன் ஒடம்புல ரத்தமா ஒடுது? சாக்கடையில்ல ஒடுது? பொண்ணு வளத்தொட்டுக் குலைக்கும் ஒங்கையை ஒருநாள் நான் வெட்டிப் போடுவே!...முதலாளி! இவனை, இந்த நாய்ப்பயலை இந்த அளத்தை விட்டு நீங்களே விரட்டலேன்னா ஒங்க