பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கரிப்பு மணிகள்

வில்லை என்று கூலியைக் குறைத்தே கொடுப்பார்கள். ஆணுடைய நிர்ணயக்கூலி பேன்னுடைய கூலியை விட் அதிகம் என்பதால், தன் புருஷனை ஜிப்சம் சுமக்கத் தள்ளிப் போகிறான் என்றுணர்ந்து மருதாம்பா சில நிமிடங்கள் செய் லற்று நிற்கிறார்கள். கண்ணுசாமிக்குத் துல்லியமான கண் பார்வை போய் எத்தனையோ நாட்களாகி விட்டன. அவர் களைப் போன்ற உப்பளித் தொழிலாளிகள் யாருக்குமே தெளிவான கண்பார்வை கிடையாதுதான் என்றாலும், கண்ணுசாமிக்குக் கண்களில் நீர் வடிந்து நீர் வடிந்து, சென்ற ஆண்டிலிருந்து, கலத்திலிட்ட சோறு கூடத் தெரியாதபடி ஒளி மங்கிவிட்டது.

“நீரு பெட்டக்கன்ன வச்சிட்டு வார்பலவைப் புடிச்சித் தொழில் செய்ய ஏலாது. “மெக்கிட்டு'க்கூலியா செய்நத் துக்கு இருந்துபோம்...அதும்கூட கணக்கவுள்ள கண்டாச் சண்டை போடுவா. ஆச்சி அளுகாண்டு எடுக்கே...’ என்று வேலைக்குச் சேர்க்கும் போதே நிபந்தனை போட்டான் கங்காணி. # -

பெண்களுக்கு நான்கு ரூபாய் கூலி கொடுப்பான். அவர்களுடைய நிர்ணயக்கூலி நாலு ரூபாயும் நாற்பது பைசாவுமாகும். ஆண்களுக்கு நிர்ணயக்கூலி ஆறுருவா பும் சொச்சமுமாகும். ஆனால் செய்நேர்த்திக் காலத்தில் முழுக்கூலியைக் கண்களால் பார்க்க இயலாது. நான்கு ரூபாய் கொடுப்பான் முன்பெல்லாம். செய்நேர்த்திப் பணிக்கு ஆண்களை மட்டுமே எடுப்பார்கள். பெண்கள் வரப்பில் குவிந்த உப்பைத் தட்டுமேட்டில் கொண்டுசேர்க் கும் பணியைத்தான் பெரும்பாலும் செய்வார்கள். இத் நாட்களிலோ, ஆடவருக்கு அதிகக்கூலி என்பதால், பெண் களையும், இரண்டு ரூபாய்க் கூலிக்கு வரும் சிறுவர் சிறுமி களையும் “பாத்திமிதிக்கச் செய்கிறார்கள். மிதித்து

  • மெக்கிட்டு-அன்றன்று சிறு கூலிக்குச் செய்யும் துண்டு வேலை. -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/14&oldid=657299" இலிருந்து மீள்விக்கப்பட்டது