பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 139

அவன் முதலாளியுடன் மோதிக்கொள்ள வேண்டும் என்றோ, நாச்சப்பனுடன் மோதிக்கொள்ள வேண்டு மென்றோ கருதிச் செல்லவில்லை. ஆனால் பொன்னாச்சி யின் வாயிலிருந்து அவன் அச்சொற்களைக் கேள்வியுற்ற நாளிலிருந்து குமுறிக் கொண்டிருந்த கொதிப்பு அச்சூழலில் வெடித்துவிட்டது.

இனி...இனி...?

13

ரி மசாமிக்கு மறுநாளே வேலை சிட்டுக் கிழிக்கப்பட் டது. தங்கராசு அவ்னிடம் வந்து, அத்தனை தேதி வரையிலு மான காசைக் கொடுத்துக் கணக்குத் தீர்த்துவிட்டான். கையெழுத்து ஒன்றைப் போட்டுவிட்டுச் சம்பளத்தைஐம்பத்தெட்டு ரூபாய் சொச்சத்தை எண்ணிப் பெற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. -

சைக்கிளைப் பிடித்துக் கொண்டு அவன் தோல்வி அவ மான உணர்வுடன் வெளிவரவில்லை. ஒரு எரிமலை வெடிக்கப் போகிறதென்ற உணர்வுடன் அவன் பொன் னாச்சியைக்கூடப் பார்க்கக் காத்திராமல் வெளிவந்தான். நேராகத் தொழிற்சங்கத் தனபாண்டியனைக் காண வீட்டுக்கு விரைகிறான். -

ஒரு காலத்தில் தூத்துக்குடி நகர்ப்புறத்தில் உப்புத் தொழிலாளருக்கென்று பட்டா செய்து கொடுத்த மனைகள் கொண்ட தெரு அது. இந்நாள் அந்த மனையில் உப்பனத் தொழிலாளி ஒருவனும் கட்டிடம் எடுத்துக்கொண்டு வாழ வில்லை, புதிய துறைமுகத்தில் அலுவலக வேலை செய்பவனும், கல்லூரியில் பணியாற்றுபவரும் வாடகைக்கு இருக்கும் வகையில் கண்ட்ராக்ட், வியாபாரம் என்று பொருளிட்டும் வர்க்கத்தார் அங்கே மனைகளை வாங்கி வீடுகள் கட்டியிருக்கின்றனர். பச்சையும் நீலமும் பாங்காப் %சப்பெற்ற சிறு இல்லங்கள் அழகுற விளங்குகின்றன.