பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 - கரிப்பு மணிகள்

கமான் வளைவுகளில் வண்ணப் பூஞ்செடிகளும், பகமை யான குரோட்டன்சுகளும் வளர்க்கப்பெற்ற வீடுகளும் இருக்கின்றன். நல்ல வெய்யில் நேரம். இந்த நேரத்தில் அவன் சைக்கிள் சக்கரம் மணலில் புதைய அந்த வீட்டின் முன் வந்து சுற்றுக் கதவைத் திறக்கிறான். o

தனபாண்டியன் உப்பளத்தொழிற்சங்கத் தலைவராக வளர்ச்சி பெற்று வந்திருப்பதை அந்த வீடே அறிவிப்பதாக அவனுக்கு அப்போதுதான் சுருக்கென்று தைக்கிறது. அவன் இத்தனை நாட்களில் அவர் வீட்டுக்கு வந்திராமலில்லை. இருட்டில், மாலை நேரங்களில் அவசரமாக வந்து செல்வான். நான்கு வருடங்களுக்குமுன் இந்த வீடு எப்படி இருந்ததென்று’ அவன் அறிந்திருக்கிறான். ஒலைக்குச்சு ஒன்று உள்ளே தள்ளி இருந்தது. அப்போது அந்தத் தெருவும் இவ்வளவுக்கு வண்மை பெற்றிருக்கவில்லை. முன்புறம் துரண்கள் அஆங்காரமாக விளங்கும் வராந்தா, மொசைக் தளம். வராந்தாவில் மேற்சுவரில் வரிசையாக அரசியல் தலைவர் களின் படங்கள் விளங்குகின்றன. காமராசர், காந்தியடிகள். நேரு, இந்திரா, அண்ணாதுரை ஆகிய எல்லாத் தலைவர் களின் படங்களும் விளங்குகின்றன. உட்புகும் வாயிலில் ஒரு வண்ணப்பூந்திரை தொங்குகிறது. வராந்தாவில் நான்கு கூடை நாற்காலிகள் இருக்கின்றன.

அவன் சிறிது குழப்பத்துடன், ‘சார்...!” என்று கூப்பிடு கிறான். உள்ளிருந்து தொப்பிபோல் முடிவிழும் தலையும், பெரிய பெரிய வில்லைகளாக, தங்க பிரேம், மூக்குக் கண்ணாடியும் கட்டம் போட்ட சட்டையுமாக ஒரு இளைஞன் வருகிறான். -

“அப்பா...அப்பா இருக்காரா? உப்பளத் தொழிலாளி

ராமசாமி, பணஞ்சோலை அளம்...’ என்று பரபரப்புடன் கூறும் அவனை அவன் அலட்சியமாக நோக்கிவிட்டு, :இப்பா இல்லையே?...’ என்று மறு மொழி கொடுக்கி

றான். “அப்பாவை இப்பல்லாம் வீட்டில் பார்க்க முடி