பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 கரிப்பு மணிகள்

விளக்குமாக அந்தச் சைகிள் அலங்கரிக்கப் பெற்ற புதுமணப் பெண் போல் நிற்கிறது. அவன் தனது துருப்பிடித்த பழைய சைகின்ளப் பார்த்துக் கொள்கிறான். சைகிள் வைத்துக் கொண்டு, படிப்பகத்தில் சென்று பத்திரிகை படிக்கும். வித்தியாசமான உப்பளத் தொழிலாளியாக இருந்த, ராமசாமி...அவனுக்கு இப்போதும் ஒரு குறைவும் வந்து விட வில்லை என்று நினைத்துக் கொள்கிறான். தலைவர் நீலச் சட்டைக்கார இளைஞனிடம் பேசிவிட்டுத் திரும்புகையில் ‘ராமசாமி வராந்தாவில் ஏறி நின்று வணக்கம் தெரிவிக்

கிறான்.

“என்ன ராமசாமி ஆளையே காணம்? அம்மா சொகமா...’ என்று கேட்டுக் கொண்டே பதிலுக்கு நிற். காமல் மேல் வேட்டி விசிற, திரையைத் தள்ளிக் கொண்டு அவர் உள்ளே நுழைந்து விட்டார். அவர் நுழைந்ததும் அந்த ஆட்களும் தொடர்ந்து செல்கின்றனர்.

ராமசாமி சற்றே பிரமித்தாற் போல் நிற்கிறான். வராந்தாவில் அழகிய இளஞ்சிவப்புக் கூடுபோட்ட விளக்கு ஒளியைச் சிந்துகிறது.

அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தும் போது அவன் உள்ளே செல்வது பண்பல்ல என்று நிற்கிறான். பணம் பிரித்துச் செலவு செய்து, துண்டுக் கடிதாசிகள் அச்சிட்டு அவன் பரப்பிய போது அந்தத் தலைவரிடம் கேட்க,

காட்ட.வந்திருக்கிறான். அது படிப்பகச் சந்திப்புத் தான். -

விட்டுக்கு வந்தாலும் முன்புற முற்றத்துக்கப்பால் வராந்தாவைக் கடந்து அவன் சென்றவனல்ல.

தனது ஆவேசக் கொந்தளிப்பு ஏமாற்றமாகிய சிறு பாறையில் பட்டு உடைந்து சக்தி இழந்து போனாற். போல் தோன்றுகிறது. எச்சிலை விழுங்கிக் கொள் .கிறான். -