பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-ராஜம் கிருஷ்ணன் I45

‘சம்பளம் ஒசத்தினாங்களா?”

“ஆமா அண்ணாச்சி. ஒனக்கு சம்பளம் அம்பது ரூபா ஒசத்தியிருக்கே, இந்த வளவில இருந்துக்கன்னா. இந்த எரையை வச்சு எதுக்கோ என்னை இழுக்கறாங்கன்னு தோணிச்சி. நா. அப்ப நாயம் கேட்டே.” அவர் முகத்தைச் சுளிக்கிறார்.

“ஏம்பா, சம்பளம் அதிகம் கொடுக்கிறோமின்னா தூண்டில் இரைன்னு சொல்லுற? குடுக்காட்ட எதுவுமில் லன்னுறிய, நீங்களும் ஒரு வழிக்கு வரணுமில்ல? சொல்லப் போனா, நியாயமா, ஒன்னைப் போல தொழிலாளிங்க வாய் திறக்க ஒண்ணில்லே, வார்முதல் பண்ணுறவ. பெட்டி சுமக்கிறவன் அன்னாடக் கூலியில் மாயிறான். அத்தையும் கங்காணி புடிச்சிட்டுக் கணக்கப்பிள்ளைக்கு லஞ்சம் குடுக்கான். அவனையும் சொல்லிக் குத்தமில்ல, அவன் முதலாளியிடம் ஈவுகாட்ட வேண்டியிருக்கு. நாம ஒட்டு மொத்தமா சேத்துப் பார்க்கணும். அம்பது ரூபா அதிகச் சம்பளம் போட்டுத்தாரேன்னா நீ ஒத்துக்க வேண்டியது தானே?” i

ராமசாமி குழம்பிப் போகிறான். பதில் வரவில்லை.

  • எப்போதும் வருமம் வச்சிட்டே எதையும் கண் ணோட்ட மிட்டுப் பயனில்லை தம்பி. சரி, பிறகு என்ன நடந்தது? உங்க வேலையும் வேண்டாம், எதுவும் வேண் டான்னு உதறி எறிஞ்சிட்டு வந்திட்டியா?” so

“அப்படி எதுவும் சொல்லல. இது சூழ்ச்சின்னு மனசுக்குப் பட்டிச்சி. நான் கண்ட்ராக்ட் அக்குரமம் பண்ணுறதச் சொன்னே. முதலாளி நான் குடிச்சிருக்கேன்னு ஏகனா. சோலைப் பயல் என்னை வெளியே தள்ள வந்தான். உண்மையைச் சொன்னதுக்கு இந்தக் கூலி அண்ணாச்சி, அவமானம் பண்ணினா, கூப்பிட்டனுப்பி, நீங்க சொல்லுங்க தாயம்...”

ராமசாமிக்குக் குரல் தழுதழுத்து விடுகிறது.