பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 கரிப்பு மணிகள்

“ஏன்ல பொம்பிளபோல அழுவுற? உன்னைப் போல ரெண்டுங்கெட்டான் பயலுவதா காரியத்தைக் கெடுத்துக் குட்டையக் குழம்புறிய, தொழிலாளர் சங்கம்னு ஒரு அமைப்பு, அதுக்கு ஒரு தலைவன்னு இருக்கறப்ப, நீ விஜயத்த அப்பவே ஏங்கிட்டல்ல வந்து சொல்லணும் கூப்பிட் டனுப்பினா; வீட்டக்காலி பண்ணச் சொன்னா, இல்ல, இந்த வளவில் வந்திருன்னு சொன்னா கூலி அதிகமாக் குடுத்தா இதெல்லாம் ஏங்கிட்ட வந்து சொல்லி யோசனை கேக்காம, முதலாளி மொகத்துக்கு நேர எதுத்துப் பேசுனா எப்படி? அவங்க காங்கரிட்டுக் கோட்டை. பத்துநூறு. ஆணைபலம்கூட இடிக்க முடியாது. அப்படி இருக்க, பேசத் தெரியாதவன்லாம் போயி என்னேனும் சொல்லிடறிய. இப்பப்பர்ரு, ஒருபயல், அமைச்சர் கலந்துக்கற கூட்டத்தில போயி ஏறுமாறாப் பேசிட்டா. ஊழல் மலிஞ்சிருக்கு, இவன் லஞ்சம் கேட்டான்; அவன் வாங்கிட்டான்னு எடுத்து. விட்டிருக்கா. இந்தப் பயகளுக்கு மரியாதையாப் பேசத் தெரியலன்னு அரசுச் சார்புப் பத்திரிக்கை பத்தி பத்தியா திட்டறா, நாம் போயி மன்னாப்புக் கேக்கணும். முதலாளிமாருங்ககிட்ட அவனுவ வாழப்பழத்தில ஊசிவய்க் கிறாப்பல நாமும். பேசணும், அது ஒரு கலை. சரி...இப்ப மணி ஏழாச்சி, நான் போவணும், நீ நாளக்கி வந்து என்னப் பாரு. நான் அவங்களை நல்லவிதமா காண்டாக்ட் சேஞ்சி, உனக்கு ஏதும் ஏற்பாடு செய்யிறேன். திரும்ப வேலைக்கு எடுத்துப் டாக...’

தலைவர் முடித்து விடுகிறார்.

ராமசாமிக்கு உருப்புரியாத உணர்வுகள் வந்து குழம்பி அவனைப் பந்தாடுகின்றன. --

இவன் தலைவனாக வேண்டுமென்பதற்காக அவன் எத்தனை பேரிடம் பேசி ஒன்று கூட்டினான்?

தலைவர்...தலைவர்.பெரிய வீடு கட்டி விட்டான்.

பளிங்குத் தரை, திரை, சோபா...அது இது என்று மேலேறிப் போகிறான். சே!