பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 147

மண்ணை வாரி எறிய வேண்டும் போலிருக்கிறது. அவன் மீண்டும் துப்பிய எச்சிலை விழுங்குவது போல: அங்கு வேலை செய்ய அவர் எடுத்துச் சொல்வாராம்?

சைகிளைத் தள்ளிக் கொண்டு அவன் தெருவில் திரும்பி வரும்போது தெரு இருட்டாக இருக்கிறது. ஆனால் அங்கே வீடுகளிலிருந்து வெளிச்சம் வழிகிறது.

இந்த அநியாயத்தைக் காரணமாக்கி ஒர் போராட் டத்துக்கு வழி வகுக்க வேண்டுமென்றல்லவோ கொதித்து வந்தான்? என்ன மோசமான தலைவர்!

ஒரு குறியில்லாமல் அவன் நடந்து செல்கிறான். விரிந்து கிடக்கும் முட்செடிப் புதரைத் தாண்டி மணல் தேரியில் தெருக்கள் கூரையும் சார்ப்புமாக இடிந்து சுவரும் ஒட்டைப் பந்தலுமாக, வேலிப்படலும் மண் முற்றமுமாகத் தொழி லாளர் வீடுகள் நிலவு மஞ்சளாக வந்து குலுகுலுவென்று முற்றங்களில் விளையாடும் குழந்தைகளைப் பார்க்கிறது. தெருவோரம் கிழவர் ஒருவர் பனஒலை சுமந்து செல்கிறார். நடையிலிருந்தே அவனைக் கண்டு கொள்கிறார். கண்களைச் சரித்துக் கொண்டு கேட்கிறார். -

“ஐட்ரா தம்பியா?”

ஆமா தாத்தா. இங்கியா ஒங்க வீடு’

“ஆமா. அதா கடாசில. இப்பத்தா வார, ஒலை வாங்கிட்டு...எங்க ஒல கெடக்கிது? ரெண்டு ருவாக்கி வாங்கின. முங்கில் பதினஞ்சி ரூபா விக்கிது. பெரணி தாரு, ஈரக்கிளி எல்லாம் வெலகுடுத்து வாங்கி வைக் கிறாப்பலியா இருக்கு? காயித பாட்டரிக்காரன் அள்ளிட்டுப் போறன. ஒரு சுசய்ட்டின்னு வச்சா, அத்த மொதலாளிய நாலாள விட்டுப் பிரிச்சிவிட்டிடறா...’

  • பெரணிநார் - வெளிப்புறத்தில் பனமட்டையில்:

கிழித்த நார் . உறுதியானது.

  • ஈரக்கிளி - பிரம்பு