பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 155

போயிட்டானே.போயிட்டா...” நெஞ்சம் துடிக்க, சோக அலைகள் புகைந்து புகைந்து எழும்புகின்றன. பொன்னாச்சி அவள் கவனத்தைக் கவரும் வண்ணம் முன்னே போய் நிற்கிறாள். அவள் கைகளைப் பற்றிக் கொள்கிறாள்.

“வாணாச்சி..அழுவாதிய...வாணா...’ “இன்னைக்கித்தா அவெபோன்ா. நாலு வருசமாச்சி அம்மன் கொடை. மைக்கு செட்டுக் கொண்டாரணுமின்னு போனா...வாரவேயில்ல...’

“ஆசைக்கிளி வளர்த்தே... அக்கரயா நாய். வளர்த்தே...’ உள்ளம் குலுங்கக் குரல் சோகச் சுவர்களை உடைத்துக் கொண்டு முடிவில்லாமல் பர்வுகிறது. -

பொன்னாச்சிக்கு நா எழவில்லை. மேலே படம் இருக் கிறது. பால் வடியும் குழந்தை முகம். வளைத்து வாகிய கிராப்பு. பட்டுக் குஞ்ச மாலையணிந்து பார்க்க வருபவர் களை எல்லாம் பார்க்கும் முகம்.

‘பாவம்...ஒடழ்பு சொகமில்லாம இருந்துதா ஆச்சி’ “ஒண்ணில,’ பூமலந்தாப்பல என்னய்யா கெடந்தா. தேரி மண்ணில. காத்துக் கருப்பு எப்பிடி அடிச்சிச்சேர. என்ன ப்யா, ஈயக்கூட நசுக்கமாட்டா...’

கிண்ணிர் முத்துக்கள் கன்னங்களை, சதையின் பற்று விட்டுச் சுருங்கிய தோலில் இறங்கிக் கீழே சிதறுகின்றன.

அங்குள்ள கடிகாரம், அவன் கல்லூரி வாழ்வின் படங் கள், அவன் புத்தக ஷெல்ஃப்’ மேசை விளக்கு, இப்போது ‘ரிப்பேராகி விட்ட அந்த டிரான்சிஸ்டர் எல்லாமே அந்தச் சோகத்தின் மெளனக் கூட்டாளிகளாக விளங்குகின்றன. அந்த மெளனப் போர்வையை விலக்க மனமில்லாமலே அவள் நிற்கிறாள். எத்தனை நேரமாயிற்றென்று தெரியவில்லை. சிறையை விட்டு வெளி வரவும் இயலாமல் உள்ளிருக்கவும் இயலாமல் அவள் குழம்பித் தவிக்கையில் வாயிலில் நிழல் தட்டுகிறது. அடியோசை கேட்கிறது.