பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கரிப்பு மணிகள்

துப் போன அந்தப்பாளம் கைகளைக் குத்தி அவனை வளையச் செய்கிறது. தடம் தெரியாமல் அதையும் போட்டுக் கொண்டு விழுகிறான்.

“...ளே விழுந்திட்டாரே...அவரால் ஆவாது. பாவம்.” சிவந்தகனி அவரைத் தட்டித் தூக்குகிறான். ‘எதும் அடிபட்டிச்சா மாமா? பாவம், உம்மால இனி அளத்து வேல செய்ய முடியுமா?...”

அவன் தூக்கிய பாளம் நொறுங்கி மண்ணும் சில்லும்ாகக் கண்களில் விழுப்புழுதி பரவுகிறது. உச்சியில் வழுக்கை, காதோரங்களில் வெண்மையும் கருமையுமாகப் பிரிபிரியாக முடிக்கற்றை; சென்ற ஆண் டி ன் இறுதியிலிருந்தே வேலைக்குப் பாதி நாள் வரமுடியாமல் ஆசுபத்திரிக்கும் சென்று வந்தான். கண் பார்வை மீளுமென்ற நம்பிக்கை இல்லை. அதற்குப் பிறகுதான் அவன் முகச்சவரமும் செய்து கொள்ளவில்லை. பார்வை போனாலும் வயிற்றுப் பசி குறைகிறதா?

‘'சாமியாரே! உன்னால எதும் ஆவாது! இது வரய்க் கும் செஞ்சதுக்கு ரெண்டு ரூவாக்கூலி தாரேன்...அம்புட் டுத்தா...’ என்று கங்காணிச் சுப்பன் கோடு கிழித்துவிடு கிறான்.

ரெண்டு ரூபா...மருதாம்பாளுக்கு நான்கு ரூபாய் வரும். வீட்டில் நான்கு குழந்தைகள்...மழைக்காலம் முழுவதும் வேலை கிடையாது. அப்போது வாங்கித்தின்ற கடன், வீட்டு வாடகை, பழைய கடன், புதிய கடன், அரிசி, விறகு, செலவு சாமான்களின் விலைகள்.

மண்ணிலே விழுந்தவனால் எழுந்திருக்க இயலாத பாரங்கள் அழுத்துகின்றன. பகல் நேர உணவுக்கு மணி அடிக்கிறது.

மருதாம்பா வந்து அவன் கையைப்பற்றி அழைக் கிறாள்.

‘வுழுந்திட்டயளா, சிவந்தகனி சொன்னா. செவ. னென்னு பாத்தி மிதிச்சிய. வேலையில்லேன்னா...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/16&oldid=657328" இலிருந்து மீள்விக்கப்பட்டது