பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 157

“ஏட்டி? எங்கே ஒடுத? நிதா, மூலக்கடயில போயி பத்து காசி பாக்கு வெத்தில, பொவயில, ரெண்டு வாளப்பளம் வாங்கிட்டு வா” என்று இடுப்பில் எந்நேரமும் செருகி யிருக்கும் பையை எடுத்து, ஒரு ரூபாய்த்தாளை அவளிடம் கொடுக்கிறாள்.

அது அவளை விரட்டுவதற்காகச் செய்யும் தந்திரமா, அல்லது மீண்டும் வரவழைப்பதற்கான சாக்கா என்று புரிய வில்லை,

பொன்னாச்சி உளம் துளும்பத் தெருவிலிறங்கி நடக் கிறாள். --

“சாத்தப்ப மவனா நீயி பனஞ்சோல அளத்துல மாசச் சம்பளக் காரனா?”

தெரிஞ்சு வச்சிருக்கீங்களே?” என்று அவன் சிரிக் கிறான். அந்தச் சிரிப்பு மாறாமலே, ஆனா இப்ப இல்ல. சிட்டக் கிளிச்சிட்டாங்க!’ என்று நிறுத்துகிறான்.

அவள் திடுக்கிடவில்லை. அதை அவள் செவிகளில் ஏற்ற தாகவே தெரியவில்லை.

‘ஒன்னாத்தா சவுரியமாயிருக்கா?” “இருக்கு, வீட்டக்காலி பண்ணிப் போடுன்னாவ முன்னயே. இப்ப வேலயுமில்ல, இனி வேற எந்தத் தாவ லன்னாலும் சோலி பாக்கணும். வீடும் இங்க எங்கனாலும் கிடக்கிமான்னும் வந்தே...’

‘பணஞ்சோல அளத்துல மாசச் சம்பளம் வாங்கி னேன்னே, என்ன தவராறு? அன்னன்னு கூலின்னாதா தவராறு வரும்...”

‘நீங்க நெனைக்கிறாப்பல இல்ல ஆச்சி. இந்த உப்பளத் தொழிலாளிய, தங்க நிலைமை சீராகணும், மின்னே றணும்னுற விழிப்பு உணர்ச்சியே இல்லாம இருக்காவ அதுவும், பொண்டுவள...’

அவன் குரல் கம்மிப்போகிறது. ‘இப்பதா முதலாளி சீமைக்கெல்லாம் போயிவந்து தொழிலை விருத்திக்குக் கொண்டு வந்திருக்கா, நாகரிகமா