பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 கரிப்பு மணிகள்

தடக்கான்னல்லாம் சொல்லிக்கிறாவ. பனஞ்சோல அளத்துல ரோடு கொட்டடி போட்டு கோயில் எல்லாம் கட்டி யிருக்காவன்னு சொன்னா... நாம் பாத்தனா கொண்டனா? கேள்விதா...” =

அவளுடைய கண்கள் சூனியத்தில் நிலைக்கின்றன.

‘அதென்னமோ நெசந்தா. மொதலாளிய ரொம்ப விருத்திக்கு வந்திட்டாவ. மிசின் எல்லாஞ் செயிது. ஆனா தொழிலாளி மிசினுக்குப் போட்டியா உப்பு வாருறா. அது இருக்கட்டும். கணக்கபிள்ள, கங்காணினு இருக்கிறவ ஆருதா பொம்பிளய கவுரமா நடத்தறா? இவனுவ வாயில செறுக்கிவுள்ளன்னுதா வரும். அம்மன் கொடையின்னுறா: ஆதிபராசத்தின்றா அளத்துக்குவர பொண்டுவள அக்கா தங்கச்சி, ஆத்தாபோல நெனக்கணும்னு அறிவு இல்ல. வயித்துக் கொடுமை, பொஞ்சாதி புருசனும் வேல செஞ்சாக் கூட அவன் கண்ணுமுன்ன் இவனுவ நாக்கில நரம்பில்லாம பேசுதா, எனக்கு ஏன் வேல போச்சி? இந்த அக்கிரமத்தைக் கேட்டேன். சிட்டைக் கிளிச்சிட்டாங்க, முதலாளிய ஆயிரம் பேராயில்ல. ஆனா, உப்பளத் தொழிலாளிய ஆயிரமாயிரமா இருக்கம். முதலாளிகளுக்கு சக்திய நாம தான் கொடுக்கிறம். இது புரியலியே யாருக்கும்? நாம எதுனாலும் போய்ச் சொன்னா போலே இந்த அரவயித்துக் கஞ்சியும் கிடைக்காம போயிரும். ஏதும் சொல்லிக் குனிலக் காதே’ன்னு அஞ்சிச் சாவுறா. ‘

“மெய்தா. கங்காணி கணக்கப்பிள்ளையாவணும்னு நினைக்கா. கணக்கப்பிள்ளை முதலாளிக்கு ஏஜண்டு துட்டுக் குடுத்தா சொந்த பந்தத்தையே கொலை செய்யத் துணியிறா. முள்ளுக்குள்ள சிக்கட்டா வெளியே வார முடியறதில்ல. முள்ளுக் கிழிஞ்சாலும், ரத்தம் வந்தாலும் பூவுண்ணு; நினைச்சிட்டிருக்கணும்...’

பொன்னாச்சி வெற்றிலை பழங்களுடன் வருகிறாள்.