பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 163

“அவன் போலீசுக்கொண்ணும் போயிருக்கமாட்டா டீக்கடைச் சம்முகம் நல்ல தண்ணி கொண்டாரச் சொன்னா. நீ ஏன் சொம்மா எதயானும் நினச்சிட்டுக் கூப்பாடு போடு த?”

சின்னம்மா அவன் முகத்தில் இடிக்கிறாள்.

“நீரு பேசாதீம்...! எனக்கு அக்கினிக் காளவாயாட்டு இருக்கு. இப்ப போயி அந்தச் சம்முகத்தக் கேப்பீரோ: மம்முவத்தைக் கேப்பீரோ பிள்ள போலீசில அடிபடுமா னான்னு பாத்து ஒம்ம தலைய அடவுவச்சானும் கூட்டிட்ே வாரும் இல்லாட்டி இங்ங ைகொலவுழுகும்’ என்று அனல் கக்குகிறாள்.

அந்தக் கடை, உப்பளத்துத் தொழிலாளர் குடியிருப்புக் களோடு ஒட்டாமல், ஆனால் பாலைவனத்திடையே ஓர் அருநீர்ச்சுனை போல் பாத்திக் காடுகளிலிருந்து வருபவர் விரும்பினால் நா நனைத்துக் கொள்ளும் வகையில் அமைந்: திருந்ததைப் பொன்னாச்சி அறிவாள். முன்பு ஒருநாள் ராமசாமி அங்குதான் தேநீர் வாங்கிக் கொடுத்தான் அவர் சளுக்கு. அங்கு இந்தத் தண்ணி"யும் கிடைக்குமோ? o

இவர்கள் குடியிருப்பின் பின் பக்கம் முட்செடிக் காடு களின் வழியாகச் சென்றால் குறுக்காகச் சாலையை அடைய லாமென்று பாஞ்சாலி சொல்வாள். ஆனால் அவர்கள் யாரும் அந்தப் பக்கம் சென்றதில்லை. அப்பன் கழி ஊன்றிக் கொண்டு அங்குதான் இயற்கைக்கடன் கழிக்கச் செல்வான்.

இப்போது அந்தக் கழியை எடுத்துக் கொடுத்து சின்னம்மா அப்ப்னை விர்ட்டுகிறாள். -

பொன்னாச்சிக்கு என்ன செய்வதென்றே புரிய வில்லை. -

சென்ற வருஷங்களில் போலீசின் கொடுமைகளை எல்லாம் பற்றிப் பேப்பரில் எழுதியிருந்ததென்று பேசிக் கொண்டார்கள். போலீசில் அடித்துக் கொன்றே இழுத்து.