பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 கரிப்பு மணிகள்

விடுவார்களாம். மாமி அதனால்தான் கல்லூரியில் போலி சென்றதும் மாமாவிடம் எப்படியேனும் கடன்பட்டுப் போய்ப் பிள்ளையைக் கூட்டிவரச் சொன்னாள். தம்பியைப் போலீசு அடிப்பார்களோ? நகக்கண்களில் ஊசியேற்றல், ! முதுகின் மேலேறித் துவைத்தல்...” *

இதெல்லாம் நினைவுக்கு வருகையில் இரத்தம் ஆவி யாகிப் போனாற் போல அவள் தொய்ந்து போகிறாள்.

சின்னம்மா அப்பனை விரட்டிய பிறகு அவளிடம், “நீ இன்னிக்கி வேலய்க்கிப் போகண்டா. பிள்ளையல்லாம் பதனமாப் பாத்துக்க. நான் துட்டுத் கந்திட்டுப் போற: சாங்காலாமா நல்லக்கண்ணுவக் கூட்டிட்டுப் போயி வெறவு வாங்கி வந்து வையி. இப்ப ரெண்டு கள்ளி கெடக்கு. இருக்கிற அரிசியப் பொங்கி அதுங்களுக்குப் போடு’ என்று கூறி விட்டுப் போகிறாள்.

பொன்னாச்சிக்குக் கையும் ஒடவில்லை. காலும் ஒட வில்லை. முன் வீட்டில் கதவு திறக்கவில்லை.

சின்னம்மா அலுமினியம் தூக்குடன் வேலைக்குச் செல் வதைப் பார்த்துக் கொண்டே அவள் வாயிலில் நிற்கிறாள். பாவம், இரவு பகலாகக் கூலிக்கு உடல் வஞ்சனையின்றி உழைக்கிறாள். இந்தக் குடிகார அப்பனுக்கு இவ்வளவு உண்மையாக உழைத்துத் தேய்ந்து போகிறாள். அழுக்குப் பனியனும் கிழிந்த கால்சராயுமாகத் தெருவில் காணும் உருவங்களில் அவள் கண்கள் பதிந்து மீள்கின்றன. யார் யாரோ தொழிலாளர் வேலைக்குச் செல்கின்றனர். சாக்கடை யோரம் நாய்கள், பன்றிகள், கோழிகள் எல்லாம் வயிற்றுப் பாட்டுக்காகவே அலைகின்றன. சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வெள்ளை வேட்டியும், சட்டையும், துண்டும் திருநீறும் குங்குமப் பொட்டுமாக வெள்ளைச்சாமித் தரகனார் போகிறார். அவர் விடு இன்னோர் முனையில் இருக்கிறது. கோபியடித்த பெரிய வீடு. மாமனுக்குக் கூட அவரைத் தெரியும். அவருக்கு ஊரில் ஒரு துண்டு நிலம்