பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 165

இருக்கிறது. சொஸைட்டிக்குத் தீர்வை கொடுக்க அழுகிறாள் என்று மாமா ஏசுவார். அவரிடம் போய்ச் சொல்லலாமா? என்ன சொல்வது?

சைகிள் விர்ரென்று போய் விட்டது. #

“ஏட்டி, காலம வாசல்ல வந்து நிக்கே? சோலி யொன்னுமில்ல?’ என்று செங்கமலத்தாச்சி கட்டிச் சாம்பலும் கையுமாகப் பல் விளக்க வந்து நிற்கிறாள்.

‘இல்லாச்சி. தம்பிய. தம்பியப் போலீசில புடிச்சிட்டுப் போயிட்டான்னு சொல்றாவ. அவ நேத்து காலம. போனவ...’

“அதுக்கென்ன...டீ”

இந்தக் கேள்வி அவளைசி சுருட்டிப் போடுகிறது. “இதென்ன புதுக் கதையா? இந்தப் பிள்ளைய கையல பீப்பா, தவரம், சைக்கிள் குழான்னு கொடுத்து எடத்துக்கு எடம் அனுப்புவானுவ. போலீசுக்காரனும் உள்கையிதா, எப்பனாலும் உள்ள தள்ளிட்டுப் போவா. அவனுவளுக்குப் பணம் பறிக்க இதொருவழி, நீ ஏட்டி வாசல்ல வந்து நிக்கே அதுக்கு?’ o

‘நா ஏந்தா ஊரவிட்டு வந்தனோன்னு இருக்கு, ஆச்சி, தம்பிக்கு ஒண்ணுந் தெரியாது...”

“வந்தாச்சி; இப்ப பொலம்பி என்ன பிரேசனம்?’

கண்ணிர் முத்துக்கள் உருண்டு விழுகின்றன. பொன் ாைச்சியின் கன்னங்களில்.

“நா யாரிட்டப் போயிச் சொல்லுவ? சின்னம்மா அப்பச்சிய ஏசி, குச்சியக்குடுத்து வெரட்டிட்டு அளத்துக்குப் போயிட்டா!’

“பொறவு நீ ஏ அழுது மாயுறே? அப்பனும் புள்ளயும் போலீசில மோதிக்கட்டும்! நீ உள்ள போயி சோவியப் பாருடீl”, என்று ஆச்சி அதட்டுகிறாள். .

மனிதர்கள் நிறைந்த காட்டில் இருந்தாலும் பாலை வனத்தில் நிற்பதுபோல் இருக்கிறது. அந்தத் தம்பி ஒரு நேரம் சோறில்லை என்றாலும் சவங்கிக் குழைந்து போவான்