பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 கரிப்பு மணிகள்

தினைவு தெரிந்த நாளிலிருந்து நோஞ்சானாக அவனை அவள் இடுப்பில்கூடச் சுமந்திருக்கிறாள். மாமி ஏசி அடித்து விரட்டி னாலும் மாமிக்குத் தெரியாமல் குளக்கரைக்குச் சென்று அழும் அவனை அழுவாத தம்பி என்று தேற்றியிருக்கிறாள். முனிசிஃப் வீட்டில் எந்தத் தின்பண்டம் கொடுத்தாலும் மறக்காமல் தம்பிக்கு இலையில் சுற்றிக் கொண்டு வந்து மாமி யறியாமல் கொடுப்பாள்.

அவனைப் போலீஸ் அடிக்கையில் அக்கா, அக்கா என்று கத்துவானோ?... *

வாசலை விட்டுக் கொல்லைப்புறம் சென்று நிற்கிறாள். பாஞ்சாலி ஆச்சி வீட்டுப் பானையைக் கழுவுகிறாள். பாலை யில் பிசாசுகள் போல் நிற்கும் தலைவிரிச்சிச் செடிகளிடையே அப்பனின் உருவம் தெரிகிறதா என்று பார்க்கிறாள். அவனைக் காணவில்லை. வெயில் ஏறுகிறது. மருது அவள் சேலையைப் பிடித்திழுத்துப் பசிக்கிதக்கா’ என்று ராகம் வைக்கிறான். நல்லகண்ணு சந்தடி சாக்கில் பள்ளிக்கு மட்டம் போட்டு விடுவான்.

பானையில் சிறிது நீர்ச்சோறு இருக்கிறது. உப்பைப் போட்டு அதைக் கரைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக் கிறாள். .

முதல் நாள் விழாவில் வாங்கிய ஊதலைப் பிசிறடிக்க ஊதிக்கொண்டு மருது வாசலுக்குப் போகிறது. நல்ல கண்ணுவைப் புத்தகம் பலகை தேடிக் கொடுத்துப் பள்ளிக்கு அனுப்புகிறாள்.

சரசி பின்னலை அவிழ்த்துக் கொண்டு வாங்கியிருக்கும் புதிய பட்டுப்பூவை அணிந்து கொள்ள, ‘அக்கா சடை போடுறியா?” என்று கேட்கிறது. -

“நீ வேலக்கிப் போவலியாக்கா?...எனக்கு ரெட்ட சடை போடறியா?’ என்று பானையைக் கழுவிக்கொண்டு பாஞ்சாலி கேட்கிறது.