பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 167

சரசியின் கூந்தலை வாரிப் பின்னல் போடுகையில் பாஞ்சாலி நாடாவுடன் வந்து உட்கார்ந்திருக்கிறது.

  • பச்சை ஒங்ககூட வரவிராடீ...’ “ஊஹாம், அண்ணனக் காங்கலக்கா அப்பச்சிகூடம் எங்களைப் பந்தல்ல குந்த வச்சிட்டுத் தேடிட்டுப் போனா. தாங்க கூத்துப் பாத்திட்டிருந்தம். இவங்கல்லாம் அங்கியே தாங்கிப் போயிட்டாவு. செவந்தனி மாமா மாமி வந்து “ஓங்காத்தா வந்திட்டா. வாங்க போவலான்னு” எளுப்பிட்டு வந்தா, அப்பதா அப்பச்சியப் பாத்த அம்மா ஏசுனா. போலிக வந்து ‘சரக்குக் கொண்டு வந்தவுகளப் புடிச்சிட்டுப் போயிட்டா. முன்ன கூட, அந்தா மாரியம்மா-பெரியாச்ை வீட்டுக்கு வருமே, அவ. பய்யன் சுப்பிரமணியக்கூட ப்ோலிசல புடிச்சிட்டுப் போயிட்டாவ. பொறவு, அவ இருநூறு குவா, இத ஆச்சிட்டதா தவலையும் போவணியும் கொண்டு வச்சிட்டு வாங்கிட்டுப் போனா. மூக்கவேயில்ல. இப்ப கப்பிரமணி இங்கல்ல. ஆர்பர்ல வேல செய்யப் போயிட் என்று அவளுக்கு தெரிந்த விவரத்த எடுத்துரைக்கிறாள்.

பொன்னாச்சிக்கு இருட்டுகையில் ஒளிக்கதிர் ஊசிகன் போல் ஏதேதோ யோசனைகள் தோன்றுகின்றன.

இருநூறு ரூபாய் யார், எங்கே எப்படிக் கொடுப்பார்கள்: அவள் யாரைப் போய்ப் பார்ப்பாள் கையில் விறகுக்காகச் சின்னம்மா தந்த இரண்டு ரூபாய் இருக்கிறது.

அத்துடன் ஒடிப்போய் பஸ் ஏறி, மாமனிடம் சென்று கூறி அழுவதைத் தவிர வேறு வழியில்லை. மாமனுக்குப் பெரிய கைகளைத் தெரியும். முனிசிஃப் ஐயா நல்லவர்.

இங்கே அப்பச்சியின் மீது அவளுக்கு நம்பிக்கை இல்லை. சின்னம்மா பாவம். அவள் என்ன செய்வாள்.

பிறகு...பாத்திக்காட்டு வேலைக்கு, அவளுடைய ஒரே

ஆதரவான ஆளும் இல்லையென்றான பின் போவாள்?

எனவே மாம்ன் வூட்டுக்குத் திரும்புவதுதான் சரி... அங்கே...அங்கே நான் இருக்கவேண்டும்.

எப்படிப்