பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 17.3

அப்போது சடையாண்டி, கிணறு செப்பம் செய்பவன் மண்வெட்டியைத் தோளில் போட்டுக் கொண்டு வருகிறான்.

‘கும்பிடறே மொதலாளி...’

“ஆடிமாசம், மழை மணி எறங்கியிருக்குப் பாரு சடையா!’

‘இது ஒண்ணில்ல மொதலாளி. காத்து குள்ச்சி. கர்போட்டந்தா; மளைவராது... துரத்துாடி முத்தாலம்மன் கொடைக்கிப் போயிருந்தே மொதலாளி, பிள்ளயப் பாத்தே, போலீசில இட்டுப் போயிட்டாவ..?’

திடுக்கிட்டாற்போல் அருணாசலம் அவனைக் கூர்ந்து நோக்குகிறார், பிள்ளை...ஆரு.வேலுவா? அவ எங்கே துரத்துக்குடிக்குப் போனான்?

If { I of


‘ஆரு? வேலுவா?’

“நம்ம புள்ள இல்ல மொதலாளி, செவந்தியாச்சி மவெ, பச்சை, சாராயம் கொண்டிட்டுப் போனான்னு வளசிசிட்டுப் டோனாவ. ராவுல திருவிழாக் கும்பல்ல, ஆட்டக்கார, மேளக் காரனெல்லாம் வந்து ஜேன்னு இருக்கையில இவனமட்டும் தலையில செமந்திட்டு வாரயில கண்டிட்டா. இவெக்கு ஒடி ஒளியத் தெரியல. தகரத்தில சரக்கு இருக்கு. போலீசின்னு தெரியாம கும்பலோடு கும்பலா வந்திருக்கா. முதுகில் குத்தித் தள்ளிட்டுப் போயிட்டாவ...’

அட...ாவி? எத்தினி நாளாச்சி? அவப்பன் சித்தாத்தா எல்லாம் கொடக்கி வந்திருந்தாவளா?’

  • நா. கண்டுக்கல மொதலாளி. பையனிங்க தண்ணி இறைக்குமில்ல? பாத்த மொகமாயிருக்கேன்னு கவனிச்சே, நம்ம புள்ள பச்சை; போன வெள்ளிக் கிளமதா...’

மாமன் மழை மணியை மறந்து போகிறார். மேல் துண்ணிர் பாய்ச்சலையும் மறக்கி பார். விருவிரென்று வீட்டைப் பார்க்க நடக்கிறார்.