பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 கரிப்பு மணிகள்

நீராடியவுடன் கிளர்ந்த பசி எரிச்சலுடன் பல்வேறு உணர்வுகளும் குலுங்குகின்றன. இப்படி எத்தனையோ பசி எரிச்சல்கள் கிளர்ந்து கொண்டுதாணிருக்கின்றன. அவை அனைத்தும் ஒன்று திரண்டுவிட்டால் பத்து நுாறு அ.இ. குண்டுகளுக்குச் சமமாகும் என்று அவருக்குத் தோன்றுகிறது. ஆனால் ஒன்று திரளும் நிலையில் இல்லாததால் மத்தாப்புப் புகையாக மட்டுமே ஆங்காங்கு கரிந்து போகிறது. பசி எரிச்சலுக்குப் பீடி, புகையிலை, டீத்தண்ணி என்று மாற்றுத் தேடிக் கொள்கின்றனர். பசியை ஆரோக்கிய ரீதியில் போக்கத் தேவையான உணவு, இரத்தத்தில் கலந்து உயிருட் டும் தெம்புக்கான அன்னசாரம் போதிய அளவு கிடைப்பதே: யில்லை.

வீட்டில் ஆச்சி இல்லை. முன்சிஃப் வீட்டுக்குப் போயி ருக்கிறாளாம். அவளிடம் பணம் இருக்கும். அவர் சர வேட்டியைக் கொடியில் போட்டு விட்டு வேறு வேட்டி உடுக்கிறார். அமாவாசை, ஆச்சியை ஏதேனும் சில்லறைக் காரியங்களுக்குக் கூப்பிட்டனுப்பி இருப்பார்கள். அவள் குளத்தில் குளித்து விட்டுதான், இனி வீட்டுக்கு வந்து பொங்குவாள். ஒரு மணியாகும். குழந்தைகளுக்கு ஏதேனும் பத்து பைசா துட்டுக் கொடுத்திருப்பாள். .

அவர் சட்டையைப் போட்டுக் கொண்டு முன் சீஃப் வீட்டுக்குச் செல்கிறார். ஆச்சி உள் திண்ணை மெழுகிக் கொண்டிருக்கிறாள். இவரைப் பார்த்ததும் அருகில் வரு, கிறாள்.

சர்ட்டு மாட்டிட்டு எங்க கிளம்பிட்டிய அமாசி, கோயிலுக்குப் போய் வாரன்னு போனிய?...”

“ஆமா. ஒரு அஞ்சுரூவா குடு வடிவு. அவசரம். காலேஜில என்னமோ அடிதடியாம். ஒம் மவன் செலம்பம் ஆடுறானாம்...” அவள் மருண்டு திகைக்கிறாள்.

‘ஆரு சொன்னது? ஆளு வந்ததா? s “ஆமா...அங்கக் கோனார் பய...ஒனக்குத் தெரியாது. அவஞ் சொன்னா. சங்கமுகேசுவரக் கோயிலுக்கு வந்தி ருந்தா?’ இதுதான் மந்திரம். *