பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 177

ஆச்சி நிதானமாக அவரது விசாரணைக்குப் பதிலளிக் கிறாள்.

“ஒடம்பு முடியலன்னுதா ஊருக்குப் போய் அந்தப் பிள்ளகளைக் கூட்டி வந்தா. கடன் தலைக்கிமேல ஏறிடிச்சி. அந்தப்பயல போலீசு புடிச்சிப் போயிட்டாவ. இந்த ஊரு உலவத்துல இல்லாததா? போலீசுத் தடியனுவளுக்கு இதொரு பணம் பறிக்கிற சோலி. பொறவு வாக்கரிசி போட்டுக் கூட்டிட்டு வந்தாவ. நேத்துத்தா காலையில கூட்டிட்டு வந்தா. சோலிக்குப் போவல. இன்னிக்குப் போயிருக்கா. கண்ணு தெரியலன்னா எதானும் சுமடு எடுக்கலாமில்லையான்னு அவனும் போயிருக்கா. ஏங்கிட்ட ஒரு புள்ள, இவளுக்குப் பெரியவ இருந்தா. அவளையும் பொன்னாச்சிக்கூடக் கூட்டி அனுப்பியிருக்கே, பொற வென்ன? எட்டுபேர் கும்பி நனையணுமில்ல? முன்னமே இல்லாத காலத்துல வாங்கித் தின்ன கடன். சிக்கு இப்ப இந்த புள்ளய மூட்டுவார கடன், எல்லா அஞ்சு நாறுக்கு மேல போயிட்டுது, அந்தப் பொம்பிள என்னேயுவா.”

‘மூட்டுட்டு வந்திட்டாவளா?...நா விசயம் கேள்விப்

பட்டுதா சாரிச்சிப் போவலான்னுவந்தே. அவன் குடிக் கிறானா?”

“ஆரு, உங்க தங்கச்சி மாப்பிளயவா கேக்குறிய? உமக்குத் தெரியாதா? தொட்டிப் பழக்கம் சுடுகாடு மட்டுமில்ல?”

அவருக்கு நெஞ்சு காய்கிறது. சரசி கொண்டு வரும் செம்பு நீரை அருந்துகிறார். எதிரே, மாலை சாத்திய, பால் வடியும் முகம் அவர் கண்களையும் கருத்தையும் இழுக்கிறது. தண்ணிரருந்தியதில் ஆசுவாசமாக இருக்கிறது. அப்பாடா அவர்களே மீட்டுவிட்டார்கள். நல்லவேளை-மனச்சான்றின் ஒரு நரநரப்பில் புறப்பட்டு வந்து விட்டாரே ஒழிய, பணத் துக்கு என்ன செய்வதென்ற பதை பதைப்பு இல்லாமலில்லை.