பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I78 கரிப்பு மணிகள்

சின்னம்மா உண்மையில் மிக நல்லவளாகவே இருக்க வேண்டும்.

பொன்னாச்சி வேலைக்குப் போயிட்டிருக்காளா?”
போறா....நீ வந்திருக்கிய. உம்மகிட்ட ஒரு சேதி” சொல்லிப் போடணும். அந்த வுள்ளக்கி ஒரு கலியானம். கூட்டி வச்சிடுங்க...ஏன்னா, திருட்டுக் ண்கயிங்க காவலிருந். தாலே நீளும்...ஒரு பையனிருக்கா. நெல்ல மாதிரி குடிகிடி ஒண்ணுங் கெடையாது. அவெ இட்டமாவும் இருக்கா. ஏதோ ரெண்டொரு ஏனம், சில தாலின்னு வாங்கி சவம்

முடிச்சி வச் சயன்னா எக்குதப்பா எதும் நடந்து போயிராது...’

பகிரங்கமா புருசனை விட்டு ஓடிவந்து முறையில்லாத வாழ்வு நடத்திய அந்தப் பெண் பிள்ளையின் வீட்டுப்படி, ஏறவே அவருக்கு முதலில் கூச்சமாக இருந்தது. தண்ணிரும் குடித்தார். அவள் தட்டில் வெற்றிலை பாக்கு எடுத்து: வைத்திருக்கிறாள். வெற்றிலையும் போடலாமோ?...

அவளைப் பற்றி அவர் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறார். நேராக இன்றுதான் பார்க்கிறார். உண்மையில் அவளுக்கு இராணிக்குரிய கம்பீரம் இருப்பதாக அவருக்குத் தோன்று கிறது. நீர் அதிகமாகிவிட்டதனால் தளர்ந்து போன பணியாரமாவுபோல் கழுத்துச் சதை தொய்ந்தாலும், முகத்தில் சுருக்கங்கள் கிறிட்டாலும், அவளிடம் களையும். கம்பீரமும் குறையவில்லை.

“பையன் ஆரு?’

‘முன்ன தொழிற்சங்கம் வச்சி, ஸ்ட்ரைக் பண்ணச் சொல்லி தடியும், கம்புமா அளத்துக் கூலிகளைப் பயமுறுத்தி நிக்க வச்சாரே, சாத்தப்ப-அந்த வருசங்கடப் பெரிய புயலடிச்சி ராமேஸ்வரம் கரையே முழுகிப் போச்சே?”

பஏற் தெரியாது? சாத்தப்பனத் தெரியாத ஆருண்டு? சொதந்தரத்துக்கு முன்ன நாங்க ஒரு கச்சியிலிருந்த