பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 18. I

மரத்தடியில் குந்தியிருந்தவர்களிலிருந்து, ஒருவன் எழுந்து அந்தப் பெண்களிடம் சென்று ராமசாமியின் காது கேட்கப் பேசுகிறான்.

“ஏ, பொண்டுவளா? இள வட்டம் வாரான்னு பல்ல. இளிச்சிட்டுப் போயி நிக்காதிய! அவன் நோட்டீசு குடுத் தாலும் வாங்காதிய பணஞ்சோல அளத்துல சின்ன முதலா எளிய எதித்துப் பேசி மூக்கு உடபட்டு இங்க வந்திருக்கா. ஒங்க சோலியுண்டு, நீங்க உண்டுன்னிரிம்! பொறவு நாம குடிக்கிற கஞ்சில மண்வுழும்...’ என்று எச்சரிக்கிறான். ராமசாமிக்கு இது புதிய அநுபவமல்ல. இருட்டுக்குள் இருப்பவன் இருட்டே பாதுகாப்பு என்று வெளிச்சத்துக்கு அஞ்சுகிறான்.

உப்பின் வெண்மையைப் பார்த்துக் கூசி வெளிச்சமே இல்லாத உலகுக்குள் அழுந்திவிட்டார்கள்.

‘வித்து மூடைக் கங்காணி ஆறுமுகத்துக்குச் சொந்த மான வீடு அது. மண் பரிந்து, கூரை பந்தலாக நிற்கும் ஆந்த வீட்டுக்கு அவன் பத்து ரூபாய் ‘அட்வான்க” கொடுத் திருக்கிறான். தனது சைக்கிளை அடகாக வைத்துவிட்டு அவன் இந்தச் சரிவைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. ஆறுமுகத்தின் கூலியாட்களில் ஒருவனாகவே அவனும் வேலைக்குச் சேர்ந்து இருக்கிறான். உப்பளத்தில் லாரி வந்து நிற்கும்போது, பெண்கள் சாக்கை விரித்து உப்பை நிரப்பு இவர்கள் மூட்டைகளைத் தைத்து, லாரியில் அடுக்க வேண்டும்.

வீட்டின் முன் சாமான்களை இறக்கிவிட்டு, மாட்டை அவிழ்த்துக் கட்டுகிறான். வண்டிச் சொந்தக்காரன் வந்ததும் அவனுக்குப் பத்து ரூபாய் கொடுக்கவேண்டும்.

இருபத்தைந்து ஆண்டுகளாக ஒரு பக்கம் இருந்த வீட்டைத் துறந்து அவனுடைய தாய் இங்கே புதிய இடத் துக்கு வந்திருக்கிறாள். அன்னக்கிளி, அழகம்மை, பேரி யாச்சி என்ற தொடர்புகளையெல்லாம் விட்டுவிட்டு வேறு புதிய பழக்கங்களைக் காண இந்தக் குடியிருப்புக்கு நகர்ப் புறத்துக்கு வந்திருக்கின்றனர் அவர்கள்.