பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 கரிப்பு மணிகள்

எதிர்ப்பாற்றலில் அவர்களுக்கு அச்சம் தோன்றியிருக்கிறது. அதுவே அவனுக்கு வெற்றி. +

பனஞ்சோலை அளத்திலிருந்து அவனுக்குத் தெரிந்த முகங்கள் வருவதைப் பார்க்கிறான்,

கைக்குழந்தையுடன் நஞ்சாயி...பண்டாரம்பிள்ளை... “என்ன அண்ணாச்சி? இங்க நிக்கிறிய?’ என்று அவள் விசாரிக்கிறாள். -

“ஆமாம், இந்த வளவுக்கு வந்திட்டே. ஞாயித்துக்கிழம வேலையா?” *

“ஆமா, கொடயின்னு ஆறு நா நின்னிட்டம். இப்ப, சோலியிருக்குன்னா கங்காணி, பொறவு என்னேய?.”

“என்னவோ கேளுவிப் பட்டம்? நெசமா அளத்துல இப்ப சோலியெடுக்கல...?”

‘இல்ல அண்ணாச்சி. மீனுக்கு எரை வைக்கிறாப்பல. கூட்டு இருநூறு ரூவா சம்பளமின்னா. எனக்குச் சம்சயம். தட்டிச்சி, என்ன வெலக்கி வாங்க முடியாது...இல்ல?’ என்று. ராமசாமி சிரிக்கிறான்.

அவர்கள் பிரமித்துப்போய் நிற்கின்றனர். பொன்னாச்சி சோலிக்கு வருதா?...’ என்று கேட்டு: அவர்களைச் சுய உணர்வுக்குக் கொண்டு வருகிறான்.

“வருது, அது ந்தங்கச்சியும்கூட அறவை மில்லுக்கு. இன்னிக்கி வந்திருக்கு. பாவம், அந்தப் பயலப் போலீசு. வளச்சிட்டாப்பல. எரநூறு ரூவா அவுராதம் கட்டி, தலவருதா மூட்டுக் கொண்டார ஒத்தாச் பண்ணினாராம். வட்டுக் கடன் வாங்கிக் குடுத்திட்டு, இப்ப அக்கா தங்கச்சி, தம்பி அல்லாம் ஞாயித்துக் கிளமயும் வேலக்கி வந்திட்டுப் போறா!’

அவர்கள் சொல்லி விட்டுப் போய் விட்டார்கள். பொன்னாச்சி வேலை முடிந்து போய் விட்டாளா? அவனுக்கு. ஏமாற்றமாக இருக்கிறது.

அவளை அந்த வழியில் செல்லும் போது மறுநாள் அவனால் காண முடியுமோ என்னவோ?