பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் I85

அவளுக்காக அவன். தன் வேலை, வீடு போன்ற வசதி களைத் துறக்கவில்லை என்று கொண்டாலும், அவளுக்காக, அவளை முன்னிட்டுத்தான் மொத்தப் பேருடைய துன்பங் களையும் பகிர்ந்து கொள்வதாக நினைத்து மகிழ்ச்சி கொள் கிறான். அந்த ம்கிழ்ச்சியில் அப்போதே மணமேடை கூட்டி யாகி விட்டாற் போலிருக்கிறது.

சண்முகக் கங்காணியிடம் கூறித் தூது போகச் சொல்ல லாம். ஆனால் அவனுடைய ஆத்தா அளத்தில் சோலிக்குப் போகும் பெண் என்றால் நிச்சயமாக ஒப்பமாட்டாள். வட்டுக் கடன்களைத் தீர்க்கப் பொன்னாச்சி சோலிக்குப் போகிறாள். மேலும், அந்தப் பெண்பிள்ளை. அவளைப் பற்றி ஆத்தா அறிந்தால்... --

அவளுடைய நேயமும் அன்புமான அந்த உரையாடல் அவனுக்கு எப்போது நினைத்தாலும் உள்ளத்தைப் பரவச மாக்குகிறது. அவனுடைய ஏதேதோ இலட்சியங்களுக்கெல் லாம் அவள் உருக்கொடுக்க வந்து வாழ்வில் குறுக்கிட்டதாக நினைக்கிறான். அதற்காக ஆத்தாவை விரோதித்துக் கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது.

மணலில் கால்கள் புதைய அவன் சாலையை நோக்கி நடக்கிறான். தொலைவில், பொட்டலில் அழகிய சில வீடுகள் எழும்பியிருக்கின்றன. தூத்துக்குடி நகரிய எல்லைகள் அகன்று அகன்று போகின்றன.

மாலை குறுகி மஞ்சளில்லாமலே கருமை அவசரமாக வருகிறது அவன் உள்ளம் துடிக்க மறந்து போகிறது.

அங்கே வருபவர்கள்...பொன்னாச்சி, இன்னும் சில சிறு பெண்கள், பையன் பச்சை, ஒரு கிழவி...

பொன்னாச்சி, அவள்தான்! அதே நடை...!

அவன் வழி மறிக்கச் சித்தமாகிறான். முகம் புரியாமல் படரும் இருள் திரையில் அவன் அவர்களை முன்னே செல்ல விட்டுப் பின்னே சேர்ந்து கொள்கிறான். தம்பி, தங்கச்சிகள், கிழவி. i.

I2