பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 க்ரிப்பு மணிகள்

சரிதான்! ஒரு கற்கோட்டை அரண் எழுப்பியிருக்கிறாள்! அவன் உள்ளூரச் சிரித்துக் கொள்கிறான். உல்லாசமாக ஒரு பாட்டை எடுத்துவிடுகிறான்.

வேலை செய்யும் பாத்திக்காடு விளையாடும் தட்டு மேடு ! கூலிவாங்கும் கிட்டங்கி கூட்டம் போடும் சாயாக்கடை.கூட்டம் போடும் சாயாக்கடை... பச்சைப்பயல் குபிரென்று சிரிக்கிறான்.

பஏலே, என்ன சிரிப்பு’ என்று பொன்னாச்சி அதட்டு கிறாள். அவள் முகம் தெரியாத போனால் என்ன? அந்தக் குரலில் அமுதமல்லவோ பொங்குகிறது? மீண்டும் பாட்டு தொடருகிறது. “போன நல்ல வருசத்தில ஏக்கம் புடிச்சிப் போன னடி...” - - - - - +

“சிச்சி! இந்தாளு ரொம்ப மோசம்’ என்று பொன் னாச்சி மனசுக்குள் சொற்களைக் கோத்து விசிறிக் கொண்டு நடையில் வேகம் கூட்டுவதுபோல் பாசாங்கு செய்கிறாள். அதற்குள் பச்சை அவனை யாரென்று கண்டுகொண்டு விட்டான்.

“அக்கா? ராமசாமி அண்ணெl’

தொணக்கி வாரியளா?” என்று பொன்னாச்சி கேட் கையில் உல்லாசம் களிநடம் புரிகிறது.”

‘இதெல்லாம் ஆரு’

. என் தங்கச்சி பாஞ்சாலி, இவ தங்கம், அவ

“எல்லா நாச்சப்ப வகையா?”

‘இன்னிக்கு எல்லாம் அறவை மில்லுல தா...”

“சவாசு. ஒராள எடுத்துட்டு ரெண்டாளுக்கு வேலை குடுக்கா! வட்டிக்கடன் எந்தப்பக்கம் வாங்கினிய?’’

“ஆரிட்டயோ வாங்குறம். தலைவர் வாங்கிட்டாரு. போலீசுக்குப் பாதி, அவியளுக்குப் பாதின்னு செவந்தனி மாமன் சொல்லுறா.'