பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 19.1

“இப்ப இதுதா நடைமுறை. இப்ப வேலை தொடங்க:ை நான் வேற நடவடிக்கை எடுப்பேன்...” கணக்கப்பிள்ளையின் காதைக் கடிக்கிறான் தரகன்.

கங்காணி ராமசாமியிடம் வந்து சங்கடத்தை எடுத்துரைக் கிறான். o

வளஞ்கதாங் குடுக்கணும், என்னேய பின்ன? வினா தவறாறு பண்றது தா மிஞ்சும். அவ இப்ப போன் பேசுவா: போலிசக் கூப்பிடுவா, தரகன் கணக்கப்பிள்ள எல்லாம் பெரியவிய பக்கம். மொதலாளிய கூட்டாயிடுவா. நமக்குத்தா கஷ்டம். ஒன்னக் கெஞ்கத.”

வேறு வழியில்லை. எழுபத்தைந்து கிலோ மூட்டையைத் தைக்க இடுப்பொடியாது

ஐம்பது கிலோ மூட்டை தைக்க இடுபொடிகிறது. *உலகத் தொழிலாளரே, ஒன்று படுங்கள்...ஒன்றுஒன்று படுங்கள்...’ o

அது நடக்குமோ? ராமசாமி குத்துப்பட்ட மென்மையான உணர்வுகளைக் கடித்துக் குதறித் தொண்டைக் குழிக்கக் கீழ் தள்ளுவது போல் விழுங்கிக் கொள்கிறான்.

மேலே வெண்துகில் வீசி மூளிச் சந்திரிகையை மறைக் கிறது வானம்.

வெண்மைக் குவியல்களை மனிதக் கூறுகள் தமது மூச்சுக் காற்றைப் பிழிந்து சாக்குப் பைகளில் நிரப்பி வண்டியில் ஏற்றுகின்றன.

18

நீர்க் கரையில் காணும் தாவரங்களில் எல்லாம் புதிய துளிர்கள் அரும்பியிருக்கின்றன. தாழைப் புதரில் செம்பட்டுக் கூர்ச்சாகக் குலைகள் மணத்தைக் காற்றோடு கலக்கின்றன. காலைப்.பொழுதுக்கே உரித்தான இன்ப ஒலிகள் செவிகளில் விழுகின்றன. ஏதோதே பெயர் தெரியாத பறவை யினங்கள்...ஜீவராசிகள், ஓடைக்கரைப் பசுமையில் கீதமிசைக்