பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் I97.

பொன்னாச்சி அவனிடம் இட்டமாக இருக்கிறாள். அவன் தான் சிறந்தவன். அதற்காக இவனை ஏமாற்றலாம்.”

‘ஏல..ஆச்சியிட்ட மூச்சி விட்டிராத.பத்திரம்’ என்று எச்சரித்து வைக்கிறார். - -

அவன் சிரித்துக் ‘கொள்கிறான். ‘பொன்னாச்சிய எப்ப மாமா கூட்டிட்டு வாரிய மானோம்புக்குக்கூட இந்தப் பக்கம் எட்டிப் பாக்கல அந்த வுள்ள’

“கூட்டிட்டு வாரணுந்தா. ஒனக்குத் தெரியாதா தங்க பாண்டி வந்தா ஒரு சிலை எடுத்து நல்லது பொல்லாது செய்யணும். இங்க என்ன இருக்கு? இந்தப் பய்யன் படிக்க முடிச்சு வாரங் காட்டியும் குறுக்கு முறிஞ்சிடும் போல இருக்கு. ஏதோ அப்பன், சின்னத்தா என்னிக்கிருந்தாலும் தாயோடு

பிள்ளைய்ோடு போக வேண்டியது தான?...”

“...அது சரி. பொன்னாச்சி எங்கிட்டச் சொல்லிட்டுத்தா பஸ் ஏறிப்போச்சு...”

அவன் மீசையைத் திருகிக்கொண்டு சிரித்துக்கொள் கிறான். s

“அப்பிடியா?” என்று அவர் வியந்தாற்போல் கேட் கிறார்.” . . . - * -

“ஆமா...பணம் எப்பவேணும் மாமா?” “நாளைய கொண்டாந்தாலும் சரி, நா நோட்டு எழுதிக் குடுக்கே.” i. -

“அதுக்கென்ன மாமா, ஒங்க பணம் எங்க போவு?”

அவன் ஆசை நம்பிக்கையுடன் வண்டிக்குச் சென்று ஏறிக் கொண்டு போகிறான். s - --

ஐநூறு ரூபாய்.கைக்கு வந்ததும், அந்தத் தாலியை மூட்டு: விடவேண்டும். ஒரு சேலை, இரண்டொரு பண்டங்கள், வேட்டி எல்லாம் வாங்கி, திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் கல்யாணம்...கல்யாண்ம்...அவர் தொழியைத் திறந்து விட்டு, கிணற்றில் நீரிறைக்கத் தொடங்குகிறார்.