பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I98 க்ரிப்பு மணிகள்

ஆச்சி குளிக்க அவ்வளவு காலையில் சென்றிருக்க மாட்டாள். முன்சிஃப் வீட்டுக்குச் சென்றிருப்பாளோ?

பசி கிண்டுகிறது. o

குழந்தைகள் அவர் வந்துவிட்டதைச் சொல்லியிருப் பார்கள். உப்பை வாரிப்போட வேண்டும். அவள் வரு வாளோ? சற்றே ஆசுவாசமாகச் சார்ப்பு நிழலில் அமர்ந்து கொள்கிறார். அவள் தலையில் வட்டி, இடுப்பில் மண்குடம் சகிதமாக வருவ்து தெரிகிறது. சோறு கொண்டு வந்திருப் பாள்... o

அவள் அருகே வந்ததும் நல்ல நீர்க் குடத்தை வாங்கி வைக்கிறார். தலைச்சுமையையும் இறக்கியதும் அவள் சேலை மடிப்பிலிருந்து ஒரு பழுப்பு நிறக் கடித உறையை ஏடுத்து அவரிடம் கொடுக்கிறாள். துணைச் செயலாளர் கூட்டுறவு உப்புத் தொழிலாளர் உற்பத்தி விற்பண்ணச் சங்கம் என்று போட்டு மேலிடத்திலிருந்து வந்திருக்கும் கடிதம்.

கதிர்வை கட்டச் சொல்லி வந்திருக்கிற நோட்டீகதான? :இந்த மூட்டகட்டிக்கிட்டு வந்தியாக்கும்’ -

“எனக்கு என்னனெளவு தெரியும்? வள்ளிப் பொண்ண வுட்டுப் படிக்கச் சொன்ன. நேத்து முன்சீஃப், வீட்டு ஆச்சி சொன்னாவ லீசைக் கான்சல் பண்ணிடுவாகன்னு. என் னவோ பாட்டரி வர போவுதா? அவிய பாலங்கிலம் போட் டுக்குவாகளாம்! என்ன எளுதியிருக்குன்னு எனக்கென்ன எளவு தெரியும்?’

அவருக்குக் கை நடுங்குகிறது. கண்ணாடி இல்லாமல் படிக்க முடியாது. கண்ணாடி கொண்டாந்தியா?”

கொண்டாந்திருக்கே!’ என்று பனநார்ப் பெட்டியி லிருந்து எடுத்துக் கொடுக்கிறாள்.

அவர் கைகளைத் துடைத்துக் கொண்டு கண்ணா டியை மாட்டிக் கொண்டு கடிதத்தைப் பிரிக்கிறார். அருணாசலத்துக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் இப் போதெல்லாம் கூட்டுறவுச் சங்கக் கடிதங்கள் த்மிழில் வரு