பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 199

கின்றன. அவர்களுடைய நிலக் குத்தகை இருபது ஆண்டு கள் முடிந்து விடுவதாலும், மூன்று தீர்வைகள் கட்டியிரா ததாலும், நில்க் குத்தகை இனி புதுப்பிக்கப்படுவதற்கில்லை என்றும் கடிதம் தெரிவிக்கிறது.

முன்பே அந்த அதிகாரி இருநூறு ஏகராவில் பத்தே ஏகராக்கூட நீங்கள் உப்பு விளைவிக்கவில்லை. இது எப்படிக் கூட்டுறவுச் சங்கம் நன்றாக நடப்பதாகக் கொள்ளமுடியும்?” என்று கேட்டார்.

நிலம் பட்டா செய்யும் போது எல்லோரும் வந்தார்கள். இப்போது... i.

அவருடைய கண்களிலிருந்து கரிப்பு மணிகள் உதிரு கின்றன.

19

உப்பளத்து வேலை முடித்து நெடுந்தொலை நடந்து வருவது பொன்னாச்சிக்கு இப்போதெல்லாம் சோர்வாகவே இல்லை. பாஞ்சாலியும் பச்சையும் துணையாக வருவதனால் மட்டும் தானா இந்த மாறுதல்? இல்லை. அச்சமும் எதிர்ப்பு மாக இருந்த உலகமே இப்போது நம்பிக்கை மிகுந்ததாகத் தோன்றுகிறது; இங்கிதமாகக் கவிந்து கொண்டிருக்கிறது முட்செடிகள் முன்போல் தலைவிரிச்சிப் பிசாசுகளாகத் தோன்றவில்லை. “என்னம்மா?’ என்று கண்சிமிட்டி இரகசியம் பேசுகின்றன. யார் வந்தாலும் எதிர்த்துவிட

முடியும். என்று தோன்றுகிறது. இந்தத் தெம்புக்கு என்ன

காரணம்?

புரட்டாசியில் நவசாத் திரி விழா-எங்கு பார்த்தாலும் அம்மன் கொலுவிருக்கையும், பூசையும் பொங்கலும் அமர்க் களப்படும். அதற்கு முன்னர் மாளய அமாவாகையில் மழை மணி விழும் என்பார்கள், ஆனாலும் முக்காலும் விழாது. வேளை நீடிக்கும். மாமன் வந்து போயிருக்கிறார். பனஞ் சோலை அளத்தில் ஒரு ஆண்டு முழுதும் மழைக்காலம் வரையில் வேலை செய்தால் ஒரு சேலை எடுத்துக் கொடுப்