பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 201

யில் பூப்போட்ட கைலியும், மேனியில் ஒட்டாத பாம்புத்தோல் போல் படம் போட்ட சட்டையும் அணிந்து கையில் கடியாரம் கட்டிக் கொண்டிருக்கிறான். மோதிரம் விரலில் பளபளக் கிறது. முடியில் வாசனை எண்ணெய் தொட்டு சீவியிருக் கிறான். அருகில் வரும் போதுதான் திடுக்கிட்டாற்போல் நிற்கிறாள். சிரித்துக்கொண்டு அவளிடம் பையை அவன் நீட்டுகிறான். - -

தங்கபாண்டி...தங்கபாண்டி எதற்கு வந்திருக்கிறான்? அவள் பையை வாங்கிக் கொள்ளாமல் தயங்கி நிற்கிறாள். அப்போது சரசி ஓடிவந்து, “அக்கா, மாம ஊரிலேந்து இவ ஒன்னப்பாக்க வந்திருக்கா...’ என்று செய்தி அவிழ்க் கிறாள்.

“சின்னம்மா வரல சோலிமுடிஞ்சி?” ‘நல்ல தண்ணிக்குப் போயிருக்கா...’ “வாங்கிக்க பொன்னாச்சி மாமா தா என்ன அனுப் 9sw.** * =

“மாமா சொகந்தானா? மாமி புள்ளிய எல்லாமும் எப்படி யிருக்கா? போன வாரந்தா மாமா வந்திட்டுப் போனா..?

‘சொகந்தா. ஆனா.மாமாவுக்கு வாயுக்குத்து மூச்சுக் குத்து வந்து படுத்திருக்காவ, அதா என்ன அனுப்பிச்சாவ. கூட்டிட்டுவான்னு சொன்னாவ...’ -

ஒம்ம அனுப்பிச்சாவளா?” அவள் கேட்டுக் கொண்டு அவனைச்சட்டை செய்யாமல் உள்ளே சென்று தாழிட்ட கதவைத் திறக்கிறாள். பச்சையிடம் அவன் பைய்ைக் கொடுக்கிறான். “'என்ன அது?” “ஒண்ணில்ல பொன்னாச்சி...கொஞ்சம் சேவும் மிட்டா யும் வாங்கியாந்த பொறவு கட்டிக்கப் போற பொண்ண வெறுங்கையோட பாக்க வருவனா?” அவன் சிரிப்பு

க-13