பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 கரிப்பு மணிகள்

வெண்மையான பற்கள் இருட்டில் கள்ளமில்லாததாகப் பளிச் சிடுகிறது. ஒரு கணம் அவள் குலுங்குகிறாள்.

மாமன் இந்த அப்பியியிலியே கலியாணத்த முடிச்சிட லாண்ணு சொன்னாவ. அத அங்க பாத்திக் காட்டு அனுப்பி யிருக்கிறாவ. திரிச்சிக் கூட்டியாந்துடனும், ஒடம்பு முடியாம போச்சின்னாவ தீர்வ கட்டல. முன்சிஃப் ஆளுவள வுட்டு உப்ப வாரிட்டுப் போயிட்டா. பொறவு நாந்தா அஞ்சு நூறு கடங்குடுத்த, துரத்துாடி போயி அத்தக் கூட்டிட்டு வந்திருன் rைrவ. ‘

இவனும் குடித்திருப்பானோ என்ற ஐயம் கொண்டு அவள் பார்க்கிறாள். நிச்சயமாக மாமா இப்படிச் சொல்லி இவனுடன் புறப்பட்டு வர அனுப்பி இருக்க மாட்டார்! வேலுவை அனுப்பினாலும் அனுப்பியிருப்பார்! வேலு கால் பரீட்சை முடிந்து ஊர் திரும்பியிருப்பானோ?

எப்படின்னாலும் நாணிப்ப, உம்மகூடப் புறப்பட்டு வரதுக்கில்ல. மாமாவுக்கு ஒடம்பு முடியலின்னா சங்கட்ட மாத்தானிருக்கு. இன்னிக்கி விசாளன். வெள்ளி போவ நாயித்துக்கிளம நா வார இல்லாட்டி, பச்சைய அனுப்புற மின்னு சொல்லும்...’

அவன் மேல் பேச்சுப் பேசுவதற்கே இடமில்லாமல் அவள் உள்ளே சென்று விடுகிறாள்.

தங்கபாண்டி பையைத் திரும்பப் பெற்றுக் கொண்டு ஏமாற்றத்துடன் அங்கிருந்து அக்லுகிறான்.

மாளய அமாவாசையன்று மழ்ை மணி விழும் என்ற எதிர்பார்ப்புடன் உப்பளத்தில் கெடுபிடியாக வேலைகள் நடக்கும். மழை மணி விழுந்துவிட்டால் உப்புக்காலம் துரத்துக்குடியில் ஒய்ந்துவிடும் என்று தீர்த்து விடுவதற்கில்லை. பருவ மழை நாகப்பட்டணம், பாண்டிச்சேரி கேரளத்துக்கரை என்று எங்கு அடித்துக் கொட்டினாலும், புயல் சுழன்று அடித்தாலும் துரத்துக்குடி உப்புக்குப் பெருஞ் சேதம் விளைவிக்க உடனே வந்து விடாது. உப்புக்காலம் தீபாவளி