பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 20.5

“ஏட்டி, ஒரு ஏனத்தை எடுத்திட்டுப்போயி இட்டிலி வாங்கிட்டு வா. சாம்பாருக்கு தாக்குக் கொண்டுபோ!’ மீண்டும் உள்ளே சென்று மெதுவான குரலில் சரசிக்குக் கட்டளை இடுவது அவர்கள் செவிகளில் விழுகிறது.

சரசி சொக்குவின் வீட்டுப்படியில் பெரிய போகணியை வைத்துக் கொண்டு நிற்கும்போதுதான் திண்ணை மெழுகும் பொன்னாச்சி பார்க்கிறாள். போகணியைக் கொண்டு வந்திருக்கிறாள் இட்டிலிக்கு?

“ஆரு வந்திருக்கிறது டீ ஆரு?”

‘அவியதா, ஆரெல்லாமோ வந்திருக்கிறாவ...’

பொன்னாச்சி முற்றத்துக்குப் பத்து வயகச் சிறுமியாக ஓடிவந்து, சன்னல் வழியாகப் பார்க்கிறாள். அவன் குரல் கேட்கிறது. o “ஆச்சி, ஏணிப்படி செரமப்படுறிய? நாங்க டீ குடிச்

சிட்டுத்தா வாரம்’

“அது தெரியும்ல!... ‘ என்று இலைக்கிழிசல்களில் இட்லி யும் சட்னியும் எடுத்து வைக்கிறாள்.

“போயி ஆறுமுவத்தின் கடையில், நல்ல டீயா, நாலு டீ ரொம்பச் சக்கரை போட்டுக் கொண்டாரச் சொல்லிட்டு வா!’ என்று விரட்டுகிறாள். .

அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டு அவள் நார்க்கட்டிலில் அமர்ந்திருக்கிறாள். எல்லோரும் வீச்சும் விறைப்புமாக வளர்ந்திருக்கும் வாலிபப் பிள்ளைகள், ஊட்டமும் செழுமையுமில்லாமல் இல்லாமையும் சிறுமையும் நெருக்கினாலும் வாலிபம் கிளர்ந்தெழும் பிள்ளைகள். அவர்கள் அங்கே சாப்பிடுவதைப் படத்திலிருந்து அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். காலையில் எழுந்ததும் அவனுக்கு நான்கு இட்டிலியும் சொக்கு கொண்டு வந்து வைத்துவிடுவாள். அதைக் கண்ட பிறகுதான் அவன் எழுந்து முகம் கழுவிக் கொள்வான். அந்தப் பெஞ்சியில்தான் அவன்