பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கரிப்பு மணிகள்

குழிந்த மூடியை மீண்டும் நீட்டுகையில் அவன் கண்டிப்பாக மறுக்கிறான். ருக்மணி, புள்ளக்கிப் பாலு கொடுக்கா அவக்கு வேணும்’ என்று பானையின் அடியில் ஒரு தம்ளர் தானிருக்கிறதென்று காட்டுகிறான்.

வெற்றிலைச் சருகும் புகையிலையும் போடுகிறவர்களும், பீடி கொளுத்தி வைப்பவர்களும், ஏதேனும் கட்டை தேடித். தலைக்கு வைத்துக்கொண்டு தலையைச் சாய்ப்பவர்களுமாக, சோற்றுக்கடை முடிகிறது. .

‘ஏத்தா, கங்காணிய பெரியாகபத்திரில கொண்டு காட்டல?...’ என்று மருதாம்பாளிடம் லெட்சுமி கேட் கிறாள். கண்ணுசாமி கங்காணி இல்லைதான். ஆனால் லெட்சுமிக்கு எல்லா ஆடவர்களும் கங்காணி என்றே நினைப்பு.

“பெரியாகவத்திரில த்ா டாக்டர் பாத்து ஆபிரசன் பண்ணமின்னா; ஆபுரசன் பண்ணா சுத்தமா கண்ணுச. தெரியாம போயிடுமிண்னு சொல்றாவ. இப்ப சோலியெடுக்க முடியாம இல்ல கடையில போயி சாமானம் வாங்கிட்டு வருவா. எங்க வளவில் அவிய பாட்டுக்கு நடந்திட்டுத் தா போவா, இந்த உப்பளத்துச் சூடு தா அக்கினியாட்டமா கண்ணுக்கு ஆவுறதில்லே...’ என்று கூறுகிறாள் மருதாம்பா.

மீண்டும் மருதாம்பா பாத்தி மிதிக்கச் சென்று, மலை வாயில் கதிரவன் சாயும் வரையிலும் அவள் வேலை செய்யும் வரையிலும் கண்ணுசாமி அந்தக் கொட்டடியில் பிரும்மமாக உட்கார்ந்திருக்கிறான். ஐந்தரை மணியோடு பாத்தி மிதிப்பு ஒய்கிறது.

‘வாரும் போவலாம்...!”

அவர்கள் குடியிருக்கும் இடம் இரண்டு மைல் தொலைவு இருக்கிறது. எல்லோரும் கைகளில், தூக்குப் பாத்திரங்களுடன் நடக்கின்றனர். சிறுவர்கள் ஒடுகின்ற னர். பனை மரங்களினுள்டே செங்கதிரோன் இறுதியாகப் பிரியா விடை பெறும் ஒளியைப் பாய்ச்சுகிறான். நெருங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/21&oldid=657416" இலிருந்து மீள்விக்கப்பட்டது