பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 கரிப்பு மணிகள்

“சின்னம்மா வெடிஞ்சதும் வந்துடுவேன்னு ரெண்டு ரூவாக் காசுக்காவ ஒழக்கப் போயி இப்படிக் கிடக்கிறி யளே?...’ என்று உள்ளம் புலம்பியழுகிறது. அவள் தாய் இறந்து போனபோது கூட அவள் இத்துணைத் துயரம் அநுபவிக்கவில்லை. தன்மீது வானமே இடிந்து கவிந்தாற். போன்று ஒர் சோகத்துள் அவள் அழுந்திப் போகிறாள்.

அவள் தன்னையும் தம்பியையும் அழைக்க வந்ததும் திரும்ப நம்பிக்கைகளைச் சுமந்து கொண்டு துரத்துக்குடி. பஸ்ஸில் ஏறியதுமான காட்சிகள் படலங்களாகச் சுருள விழ்கின்றன. அப்பனுக்கு உடம்பு சரியில்லை என்று அவளைக் கூட்டி வந்தவள் போய் விட்டாள். “அய்ந்நூறு ரூபா கடன்... கடனிருக்கு...’ என்று சோற்றுப் பருக்கைளை அளைந்து கொண்டு பிரமை பிடித்து உட்கார்ந்து விடும் சின்னம்மா... அவள் போய் விட்டாள். அவள் யாரோ? தான் யாரோ? சின்னம்மா எங்கோ பிறந்து எங்கோ எப்படியோ வளர்ந்து, யாருக்கோ மாலையிட்டு யாருடனோ, எப்படியோ வாழ்ந்து மக்க்ளைப் பெற்று, இந்த உப்புக் காட்டில் உடலைத் தேய்த்து... .

“சின்னம்மா!...” என்று கதறிக் கொண்டு உடலின் மீது விழுந்து அழுகிறாள் பொன்னாச்சி. r

ராமசாமி அவளைக் கனிவுடன் தொட்டுத் தூக்குகிறான், “அழுவாத புள்ள. நீயே அளுதா மத்த புள்ளயெல்லாம் என்ன செய்யும்? அப்பச்சிக்கு ஆரு தேறுதல் சொல்லுவா...?”

அப்போது கங்காணியும் இன்னொரு ஆளும் அங்கு வந்து தனபாண்டியனை அழைத்துச் செல்கின்றனர். அவர்களிடம் பேசிவிட்டு அவர் ராமசாமியிடம் வந்து விவரம் தெரிவிக் கிறார். o

“நூறு ரூபாய் செலவுக்குத் தந்திருக்கா ‘வ்ட்டுக்கடன் ஒடிப்போச்சு, வேல அதிகப்படி நாஞ் செய்யிறேன். கங்காணி'ன்னு கெஞ்சிக் கேட்டா. எரக்கப்பட்டுக் குடுக்