பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 கரிப்பு மணிகள்

“ஏட்டி அழுவுற அழுதா என்ன ஆவும்? அவ போயிட்டா மவராசி. அந்தப்பய காட்டில மடிஞ்சிகெடந்

தப்ப ராப்பவலா எம்பக்கத்துல ஒக்காந்து கெடந்தா. வேலய்க்கிப் போவல. நா ஒருமாசம் இப்படியே ஒக்காந்து கெடப்பே. படுக்க மனமிராது. அளத்துலேந்து வந்து

ஒக்காந்து தேத்துவா. ஒங்கக்கு ஆறுதல் சொல்ற துக்க மில்லதா ஆனா, இப்பிடியே இருந்திட்டா எப்பிடி? இந்த ஒலகத்தில நிணச்சிப்பாத்தா நமக்கெல்லாம் சொகமேது துக்கமேது? ஒரு ஆம்பிளக்கின்னு அடிமப்பட்டுப் புள்ள குட்டியப் பெற்றது சொகமின்னா அதுல இன்னொரு பக்கம் எம்புட்டு நோவும் நொம்பரமும் இருக்கி பொம்பிளக்கி சுகமும் துக்கந்தாம்பா. அதெல்லாம் இன்னிக்கு நினைச்சிப் பாக்கே. சுகம் எது துக்கம் எது? சிகப்பட்டவ நீண்டு நிக்கிறதுமில்ல, துக்கப்பட்டவன் மாஞ்சு போயிடறதுமில்ல. சினிமா பாக்கப் போறான், இப்பல்லா. அதுல சுகம் துக்கம் பாட்டு ஆட்டம் அழுகை எல்லாம் வருது. கடோசில் ஒரு முடிப்பப் போட்டு மணியடிச்சிடறாங்க. எந்திரிச்சி வரோம். அப்பிடித்தா...’

பொன்னாச்சி கண்ணிர் க்ாய்ந்து கோடாக, அசையாமல் உட்கார்ந்து இருக்கிறாள். அவள் கூந்தல் தோள்களில் வழிந்து தொங்குகிறது. மங்கலான நிலவொளி தவிர வேறு விளக்கு அவர்கள் வைத்துக் கொள்ளவில்லை.

“நேத்து இந்நேரம் கூட உசிரோட இருந்தா. இப்பிடிப்

போயிடுவான்னு கொஞ்சங்கூட நினப்பு இல்ல...” என்று

நினைவு கொள்ளும்போது சோகம் தாளாமல் குழி பறிக்கிறது.

  • அவளுக்கு ஆட்டம் முடிஞ்சி மணி அடிச்சிட்டா ஆண்டவ இல்லாட்ட எதுக்கு இந்தக் கூலிக்கிப் போறா?... பொம்பிளயாப் பெறக்கறதே பாவந்தா, கல்லுல நீதா போயி இடிச்சிக்கிற, முள்ளுல நீதா கால வச்சிக் குத்திக்கிற. ஆனா கல்லு இடிச்சிச்சி, முள்ளு குத்