பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 215

“ஆத்தாட்ட இந்தப் புள்ள யப் பத்திச் சொல்லியிருக் 5) rP**

அவன் திடுக்கிட்டாற்போல் நிமிர்ந்து பார்க்கிறான். உடனே மறுமொழி வரவில்லை. அம்மாவின் நினைப்பு மாறானது. அவள் உப்பளத்தில் வேலை செய்யும் பெண்கள் யாரையும் மருமகளாக்கிக் கொள்ள ஒப்ப மாட்டாள். சண்முகக் கங்காணியின் தங்கச்சி மகள் வாகைக்குளம் ஊரில் இருக்கிறதாம். எட்டுப் பிள்ளைகளுக்கு நடுவே பூத்திருக்கும் அல்லி மலராம்... அவன் செவி கொடுத்துக் கேட்கவில்லை. இதற்காக அவனால் தாயிடம் போராட முடியாது. ஏ னெனில் அவனுடைய அன்னையின் உலகம் குறுகிய எல்லை களுடையது. நிமிர்ந்து பார்க்கும் இயல்பு இல்லாதவள் அவள். அளத்தில் இருநூறு ரூபாய் சம்பளத்தை உதறிவிட்டு வந்திருப்பதையே அவன் அவளுக்குத் தெரிவிக்கவில்லை. தன்னை வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள் என்று தான் கூறியிருக்கிறான். அவள் நாள் முழுவதும் தன்னுடைய உலகத்திலேயே கனவு காண்கிறாள்.

அவன் மெளனம் சாதிப்பதைக் கண்டு ஆச்சி மீண்டும் வினவுகிறாள்.

“ஏன்ல...ஆத்தாட்ட சொல்லலியா?” “இல்ல. பொறவு சொல்லிக்கலான்னுதா சொல்லல...’ அவனுட்ைய குரல் அமுங்கும்படி பொன்னாச்சி P. வருகிறாள். “. “ஆச்சி...? அப்பச்சி... அப்பச்சிய வந்து பாருங்க...! முளிச்சாப்பல கட்டயா இருக்காவ...எப்படியோ...’

சாவு வீடென்று கொளுத்தி வைத்திருக்கும் சிறு விளக்குச் சுடர் பெரிதாக்கப் பட்டிருக்கிறது. அவன் விழித்தபடியே கட்டையாகக் கிடக்கிறான்; அசைவேயில்லை,

அந்தப் பெண் பிள்ளை போன பிறகு.அவனுக்கு... எல்லாமே ஒய்ந்து விட்டது.