பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2I 6 கரிப்பு மணிகள்

பொன்னாச்சியின் ஒல ஒலி வளைவில் எல்லோரையும் திடுக்கிட்டெழச் செய்கிறது.

2 :

அப்பன் இறந்தாலும் அம்மை இறந்தாலும் வெகு நாட் களுக்குத் துயரம் கொண்டாடுவதற்கில்லை. ஏனெனில் வயிற்றுக் கூவலின் முன் எந்த உணர்ச்சியும், மானஅபிமானங்களும் கூடச் செயலற்றுப் போய்விடும். உயிர் வாழ்வதே உழைப்புக்கும் அரைக் கஞ்சியின் தேவைக்கும் தான் என்றான பிறகு மென்மையான உணர்ச்சிகள் ஓடி ஒளிந்து கொள்கின்றன. பளிங்குச்சில்லும் மணலும் களியும் கொண்டு மண்ணின் உயிர்க் கண்களைத் துப்புரவாகத் துடைத்து பின்னர், அதில் பசுமையை எதிர்பார்க்க முடியுமா? அந்தப் பாத்தி கரிப்பு மணிகளுக்கே சொந்தமாகி விட்டதால் பசுமை துளிர்க்கும் மென்மையான உணர்ச்சிகளைப் பாராட்டு. வதற்கில்லை. பொன்னாச்சியும் பச்சையும் வேலைக்கு. வருகின்றனர். ஒரு வாரம் சென்றதும்,

‘பாவம், சின்னாத்தா, அப்பன் ரெண்டு பேரும் ஒன்னிச்சிப் போயிட்டா...’ என்று பேரியாச்சி இரங்குகிறாள்.

“இந்த வுள்ளியளுக்கு ஆத்தான்னு கொடுப்பினயில்லாம லேயே போயிடிச்சி... அந்தப் பய்யனப் போலீசில புடிச்சிட்டுப் போனப்ப, சின்னாத்தா தா ஆன வாடும்பட்டான்னு, சொல்லிச்சி பாவம்...’ என்று இறந்தவளின் மேன்மையைக் கூறுகிறாள் அன்னக்கிளி.

‘இப்பிடிக்கும் நல்ல விய இருக்காவ. சக்களத்தி வுள்ளியளக் கொல்லுறவியளும் இருக்கிறாவ. ஏதோ ஒலவம’ என்றெல்லாம் தங்கள் உணர்வுகளை வெளிக் காட்டிக் கொள்கையில் கண்ட்ராக்ட் வந்து விட்டார். வாயை மூடிக் கொள்கின்றனர்.