பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் I9

வரும் மருதாம்பா, அவன் செவிகளில் மட்டும் விழும்படியாகக் கேட்கிறாள்.

‘ஏன் சவங்கிப் போயிட்டிய...?’

‘சவங்காம என்ன செய்ய? ரெண்டு ரூவாக் கூலிக்குக் கூட ஏலாமப் போயிட்டனில்லா...’

அவனுடைய கை, வார் பலகைக் கம்பைப் பிடித்துப் பிய்த்துக் காய்த்துக் கடினமாகி விட்ட கை, அவள் மணிக் கட்டைப் பற்றி அந்த எலும்பு முழியை அழுத்துகிறது.

“...நா.நாத்திக்கிழம போயி அந்த வுள்ளயக் கூட்டிட்டு

ar..."”

“எந்த வுள்ள?’’ “ஆதா, ஒங்க வுள்ள பொன்னாச்சி பயலும் வரட்டும். ரெண்டோட ரெண்டா இருக்கட்டும். போன வருக

மானோம்புக்குப் போனப்பவே செவந்தகனி பொஞ்சாதி சொன்னா. அவியளுக்கும் அஞ்சாறு வுள்ள; ‘தம்பாட்ட ளத்துல ஒண்ணும் கண்டு முதலாவுறதில்ல. நெதவும் அடி. யும் மிதியுந்தான்னா. இங்கு நாம கூட்டி வச்சிக்குவம். நாம குடிக்கிற கஞ்சிய அதுங்கக்கும் ஊத்துவம்னு தோணிட்டே இருக்கி என்னாந்தாலும் அவிய ஆத்தா அநுபவிக்கிற சொத்து, நா அவகரிச்சிற்ற....”

இருளில் ஒலிக்கும் மந்திரச் சொற்களைப்போல அவன். செவிகளில் விழுகின்றன. அவன் ஆதரிக்கும் நெடு மரம் காய்ந்து பட்டுப்போகும் நிலையிலிருக்கிறான். தாயற்ற அந்தக் குழந்தைகளையும் கூட்டி வருவதாக அவள் சொல் கிறாள். -

இது.

அவன் மெளனமாக நடக்கிறான்.

  • தம்பாட்டளம் : தன்பட்டாளம்-சிறு அளவில் தாமா கவே உப்பு உற்பத்தி செய்யும் சிறு தொழில் அளம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/22&oldid=657436" இலிருந்து மீள்விக்கப்பட்டது