பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கரிப்பு மணிகள்

ராமசாமியின் அன்னை வாயிலிலேயே நிற்கிறாள். அவன் வீட்டில் வந்து தங்கி மூன்று நாட்களாகிவிட்டன. அவளால் கட்டிக்காக்க இயலாத எல்லைக்கு அவன் போய்விட்டான்.

செவந்தியாபுரத்தில் இருந்த வரையிலும் அவளுக்கு வெளிமனித உறவுகள்ென்ற உயிர்ச்சூடு இருந்தது. பேரி யாச்சி, அன்னக்கிளி, எல்லோரும் பேசுவார்கள். அன்னக்கிளி குழந்தையைக் கொண்டு விடுவாள். அவள் ஆடு வளர்த்திருக் கிறாள். கோழி வளர்த்திருக்கிறாள். அவரையோ சுரையோ கொடிவீசிக் கூரையில் பசுமை பாயப் படரப் பாடுபடுவாள். இப்போது மாசச்சம்பளமில்லை. முன்போல் அவன் அவள் கையில் பணம் தருவதில்லை. அரிசி வாங்கிப் போட்டான். நல்ல தண்ணிர் கொண்டு வந்து கொடுக்க எதிர் வீட்டி லிருக்கும் மங்காவை மாசம் இரண்டு ரூபாய்க்கு ஏற்பாடு செய்திருக்கிறான். அவள்தான் இவளிடம் பல செய்திகளை வந்து சொல்கிறாள்.

“ஒம் பய்ய, அந்தப் பொன்னாச்சியத் தொடுப்பு வச் சிருக்கா. அதா, இப்ப மாலக்காரர் அளத்துல அறவைக் கொட்டடில அடிபட்டுச் செத்தாள ஒரு பொம்பிள...?’

முதியவளுக்குக் காது கேட்காதென்று சத்தம் போட்டுப் பேககிறாள் மங்கா.

- “பனஞ்சோல அளத்துப் பெரிய முதலாளிக்கு வைப்பா இருந்தாளே ஒரு பொம்பிள? அவ வளவுலதா இந்தப் பொண்ணும் இருக்கு. இந்த மீட்டங்கியெல்லா அங்கதா கூடிப் பேசறாவளாம். அவக்கு ரொம்ப பவுரு...’

இதெல்லாம் அவள் செவிகளில் விழுகிறதோ இல்லையோ என்ற மாதிரியில் மங்கா அவளை உறுத்துப் பார்க்கிறாள். ஆனால் அவளுள் ஒரு கடலே கொந்தளிக்கிறது. நினை வலைகள் மோதுகின்றன.

பையன் எந்த வலையில் சென்று விழுந்துவிடக் கூடாது என்று அஞ்சினாளோ அங்கேயே போய் விழுந்து விட்டான்.

இதற்குமுன் இதுபோன்று வேலை நிறுத்தம் என்ற ஒலி