பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ண்ன் 223

காற்றுவாக்கில் வந்ததுண்டு. ஆனால் பணஞ்சோலை அளத்தை அது தட்டிப்பார்த்ததில்லை. மேலும் ராமசாமி மாசச்சம்பளக்காரன். அவனிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்ததில்லை. சோலிக்குச் செல்வான்; வருவான். கால் புண் வந்தாலும் கூடப்.பாக்கை உரசி விழுதெடுத்து அப்பிக் கொண்டு உட்கார்ந்திருப்பான். அவன் இப்போது வீட்டுக்கே பாதி நாட்கள் வருவதில்லை.

‘அந்தப் பொம்பிள செத்தால்ல? அதுதா இப்ப நிலம் நட்ட ஈடுன்னு அஞ்சாயிரம் கேக்கச்சொல்லி இந்தப் பொம்பிள தூண்டிக் கொடுக்களாம். அவக்கு ஒருபய இருந்து செத்திட்டானில்ல. என்ன எளவோ சாராயங் குடிச்சி? அந்த ஆத்திரம். மொதலாளிமார எதுக்கச் சொல்லி இந்த எளசுகளத் துாண்டிக்கொடுக்கா!’

“அந்தச் சக்காளத்தி வீடு எங்கிட்டிருக்குன்னு தெரியு மாட்டீ?” என்று கேட்கிறாள் முதியவள். மங்கா இடி இடி என்று சிரிக்கிறாள். “ஐயோ? நீ போகப் போறியா?...வாணாம். ரொம்பத் தூரம் போவணுமா. உம்பய்ய ராவுக்கு இன்னிக்கு வருவா. சோறாக்கி வையி!’

மங்கா போகிறாள்.

அந்தத் தாய் பித்துப் பிடித்தாற்போல நிற்கிறாள்.

ஒடைக்கரை நெடுகத் தாழைப் புதர்களில் மணத்தை வாரிச் சொரியும் பொன்னின் பூங்குலைகள் மலர்ந்திருக் கின்றன. வேலுவுக்குப் பரீட்சையின்றிக் கல்லூரி மூடிவிட்ட தால் ஊருக்கு வந்திருக்கிறான். அவன் முள் செறிந்த தாழை களை விலக்கிக் கொண்டு கவனமாக இரண்டு பூங்குலை களைக் கொய்து கொண்டு வருகிறான்.

மஞ்சள் பூச்சு படர்ந்த முகத்தில் திருநீறும் குங்குமமும் துலங்க, மொடமொடவென்று கோடிச் சேலயை உடுத்துக் கொண்டு பொன்னாச்சி சங்கமுகேசுவரர் சந்நிதியில் புது