பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 227

“ஆரயுமில்ல, சக்திவேலு வந்திருக்கா. அவ பெறந்த நாளு அவாத்தா எதோ நேந்துக் கிட்டாப்பல...அவ னுக்காவத்தா நிக்கே...’ i.

முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முடியுமா? தங்கபாண்டியன் கண்கள் கபடத்தை நிரப்பிக் கொண்டு பொன்னாச்சியின் மீது பதிகின்றன. பிறகு தட்டதுக்கு மாறுகின்றன.

கெளவா, பொய்ய ஏஞ் சொல்ற?” என்ற முணமுணப் புடன் அவர் மீது குரோதப் பார்வையை வீசுகிறான்.

“அதுக்கு ரெண்டுமால, புதுச்சில, வேட்டி...ஒம்ம மவனுக்கு இவளக் கட்டிவைக்கப் போறியளா?”

“தங்கபாண்டீ வாயத் தொறந்து வ்ார்த்தய அநா வசியமா, வுடாத ஒஞ்சோலியப் பார்த்திட்டுப்போ!’

“என்ன சோலி? என்னவே, சோலி இப்ப ஏன் சோலி இதா. எனக்கு இப்ப பணம் வேணும்? என் ரூவாய வச்சிட்டு மறுவேலை பாரும்’

“சரி, தார. நீ முதல்ல இந்த இடத்தில இப்ப ஏங்கிட்ட வம்புக்கு வராத. உனக்குக் கோடி புண்ணியம் உண்டு. போல...’

அவர் அழாக் குறையாகக் கெஞ்சுகிறார். . “அது சரி. எனக்கு இப்பப் பணமொட. ஒங்ககிட்டக் கேக்கத்தா வந்த்...” என்றவன் கண்சிமிட்டும் நேரத்தில் லபக்கென்று குனிந்து தட்டத்தில் வெற்றிலை பூமாலை களுக்கிடையே புதிய மஞ்சட்சரட்டில் கோத்து வைத்திருந்த மங்கிலியத்தை எடுத்துவிடுகிறான்.

அவர் பதறிப் போகிறார் ஏல, குடுரா அதெ கொரங் குப் பயலே அத்த ஏ ன்டா எடுத்த:’ அவன் பின் அவர் ஒடுகிறார். -

“நீரு என்னிய மோசஞ் செய்தீரல்ல? இந்தத் தாலிய இப்ப கெட்டி இவள இழுத்திட்டுப் போவ.”

பொன்னாச்சி அஞ்சிச் சந்நிதிச் சுவரோரம் ஒண்டிக் கொள்கிறாள்.