பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 29

சங்கமுகேசுவரனுக்கு முன்பு சாத்திய ரோஜா மாலை. யைக் குருக்கள் அதைப் பிரித்து எடுத்துப் போட்டிருக்கிறார். முறுக்கி மஞ்சட்துளைப் பூசி விரைவில் மாமன் கொண்டு வருகிறார். அதில் பொன்னின் சின்னமில்லை; ராமசாமி ஏதோ நடந்திருக்கிறதென்று ஊகித்துக் கொள்கிறான். எனினும் கேட்கவில்லை. அந்த மஞ்சட் கயிற்றை அவளுக்குப் பூமாலையுடன் அணிவித்து அவளை உரிமையாக்கிக் கொள் கிறான். குருக்கள் மணியடித்து மணமக்களுக்காக அருச்சனை செய்கிறார். பொங்கல் பிரசாதம் பெற்று மண மக்களை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் வருகையில் அருணாசலத்தின் கண்களிலிருந்து நீரருவி பெருகுகிறது. புட்டும் பயற்றங் கஞ்சியும், பழமும் பப்படமுமாக மாமி அவர்களுக்குக் காலை விருந்தளிக்கிறாள். “ - மாமியின் காலைக் கும்பிட்டுப் . பன்னிகையில் புதிய தாலியை எடுத்துக் காட்டவில்லை. முனிசிஃப் வீட்டாச் சியை, இன்னும் தெரிந்தவரிகளைக் கும்பிடுமுன் மாகாளி பம்மன் கோயிலையும் வலம்வந்து பணிகின்றனர். பின்னர் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு தாத்துக்குடி பஸ். ஏறுகின்றனர். i * =

தெரு முனையில் இவர்கள் வருவதை வாயிலிலிருந்தே, சரசி பார்த்து விடுகிறாள். “அக்கா வந்திற்று.அக்கா... அல்லாம் வந்திட்டாவ...’ என்று உள்ளே ஒடுகிறாள். சொக்கு வருகிறாள்; பவுனு வருகிறாள். சொக்குவின். புருசன் கூட எழுந்து நிற்கிறான். o

செங்கமலத்தாச்சி. எங்கே?

ஆச்சியில்ல சரசு?”

ஆச்சிய, அந்தப் பெரிய கணக்கவுள்ள ரிச்சாவில கூட்டிட்டுப் போனாவ!”

பொன்னாச்சி கேள்விக் குறியுடன் அவள் முகத்தைப் பார்க்கிறாள். --

பெரி...முதலாளிக்கு ரொம்ப ஒடம்பு சாஸ்தியாயிருக் குன் னு கூட்டிப் போனா. படுத்த படுக்கயா இருக்காவளா...'