பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 கரிப்பு மணிகள்

என்று மெல்லிய குரலில் சாடையாகச் சேதி தெரிவிக்கிறாள்

சொக்கு.

பொன்னாச்சி சட்டென்று நினைவு வந்தவளாகச் சொக்குவையும், அவள் புருசனையும் அடி தொட்டுப்பணி :கிறாள். -

அவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி, பவுனுவும் சொக்குவும் குலவையிட்டு வாழ்த்துகின்றனர். இலைகளில் இட்டிவி யுடன் சினியும் சட்டினியும் வைத்து அவளுக்கும் ராம சாமிக்கும் உண்ணக் கொடுக்கிறாள் சொக்கு.

“நாங்க அங்கயே உண்டாச்சு. இப்ப வாணாம்.’

என்றால் அவள் விடுகிறாளா?

“இருக்கட்டும்...உண்டுக்கடி...உங்கப்ப, ஆபி, சின் னம்மா, ஆருமே பாக்க இல்லாம போயிட்டாவ...’ என்று கண் கலங்குகிறாள். சிவந்தகனி பழமும் கலரும் வாங்கிக் கொண்டு ஓடிவருகிறான். சிவந்தகனியின் பெண்சாதி அவள் புடவையைத் தொட்டுப் பார்த்து மகிழ்கிறாள். குழந்தை பழத்துக்குக் கை நீட்டுவன்த விலக்கிக் கொண்டு அவளுக்கு இலையில் பழத்தை வைக்கிறாள். சேவுப் பொட்டலத்தை அவிழ்த்து வைக்கிறாள். “அக்கர்வுக்கு ரொம்ப ஆசை...கலர் குடிச்சிக்கும் மாப்பிள! பொன்னாச்சி கலர் குடிச்சிக்க...!” என்று சிவந்தகனி உபசரிக்கிறான்.

என்னத்துக்கு இப்படிச் செலவு பண்ணுறிய?’ என்று பொன்னாச்சி கடிந்து கொள்கிறாள். சரசி கிளாசெடுத்

திட்டு வா!’

‘இருக்கட்டும். கலியாணம் கட்டி வாரவங்களுக்கி ஒரு விருந்தாக்கிப் போட இல்லாத போயிட்டம். நீங்க ஆருக்கும்

குடுக்க வாணா. நா அவியளுக்கு வேற வrங்கிக் குடுப்ப.”

இந்த அன்புப் பொழிவில் திளைத்து பின் ராமசாமி அவளைத் தன் குடிலுக்கு அழைத்துச் செல்கிறான். மாலை