பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 231

சமயங்கும் அந்த நேரத்தில் வீடு திரும்பும் அனைவரும் அந்த மணமக்களைப் பார்த்து வியந்து மகிழ்ச்சி தெரிவிக் கின்றனர். -

கூந்தலில் தாழையும் மருவும் மணக்க, தன் மகனுடன் வந்து அடி தொட்டுப் பணியும் பெண்ணைக் கண்டு தாய்’ வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்திருக்கிறாள். சிறிது நேரம் பேச்சே எழவில்லை. பிறகு அவன் முகத்தை அவள் கை தடவுகிறது.

‘ஏ ராசா...!... கண்களில் ஒளி துளும்புகிறது. “அம்மா, இவதா ஒம் மருமவ...பொன்னாச்சி.” தாய் அவளுடைய கழுத்திலுள்ள மஞ்சட் சரட்டைக் கையிலெடுத்துப் பார்க்கிறாள். வெறும் மஞ்சள் சரடு. ஒரு குன்றிமணி பொன்னில்லை. s

“இம்புட்டுநா வேல செஞ்சே! அளத்து மொதலாளி கலியாணத்துக்கு ஒண்ணுமே இல்லேன்னுட்டாவளா? ஒரு மிஞ்சி தங்கமில்ல.”

‘அம்மா இவ பேரே பொன்னாச்சிதா! அம்புட்டும் தங்கம்’ அவனுடைய நகைச்சுவைப் பேச்சு அவளுக்கு ரசிக்கத்தானில்லை. பொன்னாச்சிக்கோ, பாயசத் துரும்பாய் தினைவுப் பிசிறுகள் நெஞ்சில் தைக்கின்றன.

இரவு, பாய் தல்ையணையை உள்ளே வைத்துவிட்டு, தாய், தனது துணி விரிப்பை எடுத்துக் கொண்டு வெளியே வந்துவிடுகிறாள். அந்தச் சோபன இரவில், பொன்னாச்சி கண்ணிர் தோய்ந்த பனி மலர் போல் விலகி நின்று அவனைப் பணிகிறாள்.

என்னவுள்ள இது?” ‘நீங்க பொறவு மனக் கிலேசப் படக்கூடாது. தாலியத் தங்கபாண்டி எடுத்திட்டுப் போனா. ஒங்கக்குத் தெரியும். அ.வெ. தாலியத்தா கொண்டு போனா. என் ராசா நா எப்பிடிச் சொல்லுவே ஒங்ககிட்ட."