பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 கரிப்பு மணிகள்

ராமசாமிக்கு இதையெல்லாம் கேட்கப் பொறுமை. யில்லை.

  • நீ ஒண்னுஞ் சொல்லாண்டா. சொல்லவுடமாட்ட.” அவள் கை அவனைத் தடுத்து நிறுத்துகிறது. அவன் திகைத்துப் போகிறான். #.
  • நா. அன்னியே ஒங்ககிட்டச் சொன்ன; அந்தக் கிழக்கில உதிப்பவஞ் சாட்சியா என் அந்தராத்மாவுல துளி அழுக்கு. கெடயாது. ஆனா, பாத்திக்கட்டுச் சேறு எம்மேல. பட்டிரிச்சு!...”
அட, சே, இந்த நேரத்துல இத்தையெல்லாஞ் சொல் விட்டு அந்த நாச்சப்பமூஞ்சில அன்னைக்கே குடுத்தனே’

கதாச்சப்ப இல்ல. அவனை நா சமாளிச்சிட்ட அந்தச் சோலப் பய குடிச்சிட்டு தேரிக் காட்டு இருட்டில...” அவள் தேம்பித் தேம்பி அழுகிறாள்.

ஒரு கணம் பருக்கைக் கல் குத்திவிட்டாற் போன்று ராமசாமி திடுக்கிட்டுப் போகிறான். ஆனால் மறுகணம் அவன் வென்று விடுகிறான்.

பொன்னாச்சியின் கண்ணிர் கரிப்பில் உதடுகள் அழுந்து கின்றன.

கறி பொன்னு...தங்கம் எந்தச் சேறும் ஒம் மேல. ஒட்டாது. நீ தங்கம்...” -

அந்தக் கரிப்பு ஈரேழு உலகங்களிலும் கிடைக்காத இனிமையாக இருக்கிறது.

23

செங்கமலத்தாச்சி நிறையப் பன ஒலை சேகரித்து முன் னறை.முழுவதும் அடைத்து இருக்கிறாள்.

சரசி அவள் உள்நோக்கைப் புரிந்து கொண்டு விட்டாற். போல் தோற்றும்படி வெடுக்கென்று கேட்கிறது. “ஆச்சி: அவியல்லாம் அளத்துக்குப் போகாம மொடங்கிட்டா. பொட்டி செலவிருக்குமா? ஆரு வாங்குவா?” அந்தச் சிறுமியை ஆச்சி உறுத்துப் பார்க்கிறாள்.