பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 2

ரூம்புல வந்து பயமுறுத்தினா. ‘நீ என்ன நினைச்சிட்டு அவியள இப்பிடிப் பேசின? அவிய வயசு காலத்துல ரொம்பக் கிலேசப்பட்டு ஒன்னப் பாத்துப் பேசணுமின்னு பெருந் தன்மையாக் கூட்டு விட்டா நீ மட்டு மரியாதியில்லாம தடக்கே! அவவ நிலமய நிணச்சிப் பேசணும்'ன்னா. “எனக்குத் தெரியும். என்னேவிய போலீசுல புடிச்சிக் குடுப்பிய. ஆள் வச்சி அடிப்பிய, அம்பிட்டுதான?'ன்ன. : எனக்கு இனி என்ன பயமிருக்கி?”

‘'நீ அநாசியமாப் பேசுத. ஒனக்கு ஆடு பணம் ஒதுக்கி யிருக்கு. இப்ப வேணுன்னாலும் ஆயிரம் ஒதுக்கிறமுன்னா முதலாளி. ப்ேசாம வாங்கிட்டு ஒதுங்கிப் போ. இந்தத் தலத்தெறிப்பு பயகளைச் சேத்துட்டு வம்புல எறங்காதி, ஆமாம்..."ன்னு பயங்காட்டினா.’

‘எனக்குப் பணம் வாணா. ஒங்க அந்துாராத்துமாவத் தொட்டுப் பாத்துப் பேகம். ஒங்கக்கு உப்பச் கரண்டிக் குடுக்க ஒழக்கிற பொண்டுவளையும் ஆம்பிளகளையும் புள்ளகளயும் நீங்க குளிரும்படி வச்சிருக்கல. ஒங்ககிட்ட பணமிருக்கி, அந்த வலத்துல போலிசைக் கையில போட்டுக் குவிய. சருக்காரைக் கையில போட்டுக்குவிய, ஏ, சாமியையே’ கையில போட்டுக்குவிய; ஆனா நீங்க பண்ண பாவம் ஒங்கள் சும்மா விட்டிராது"ன்னு சொல்லிவிட்டு மடமடன்னு எறங்கி வந்திட்ட...” -

ராமசாமி வியப்பினால் சிலையாகி நிற்கிறான். அவன் கண்களில் முத்தெள்ளி மின்னுகிறது.

“ஆச்சி! ஒங்களுக்கு நாங்க ரொம்ப ரொம்பக் கடமப் பட்டிருக்கிறம். ஒங்க ‘சப்போட்டு'தா எங்களுக்கு இப்ப தயிரியத்தையே குடுத்திருக்கு. என்ன வந்தாலும் ரென்டிை ஒண்ணுன்னு துணிஞ்சி நிக்கோம்...’

பொன்னாச்சி முற்றத்தில் நின்று சன்னல் வழியாக அவன் அவளைக் கூப்பிடுவதைப் பார்க்கிறாள். அவர்கள் சென்ற பின்னர், ஒரு கலியான வீட்டின் பரபரப்போடு