பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 237

வுள்ள. எனக்கு சொதந்தர நா, மே தினத்துக்குக் கூட

லீவுள்ள, இதெல்லா ராமசாமி சொன்ன பொறவுதா

தெரிஞ்சிச்சி. என்ன எம்புட்டு நாளா ஏமாத்திட்டிருக்காவ!”

பொன்னாச்சி சிலையாகிறாள்.

‘அருவால்லாங் கொண்டிட்டு வந்தியளா? அல்லாம் இங்ஙனமும் இருக்கட்டும்! என்னக் கேக்காம ஆரும் தொடாதிய பொவு, வம்பு தும்பு ஒங்களால வந்துதுன்னா, அம்புட்டும் வீணாயிரும். அளத்து வாசல்ல நின்று ஆரும் சோலிக்குப் போவாம பாத்துக்கும்...’

ஒரு கட்டுக்குள் சீராக அடக்கி வைப்பது எவ்வளவு பெரிய செயல்? மாலை தேய்ந்து இருள் பரவுகிறது. மீண்டுமொரு முறை சோறுண்ண நேரம் வந்துவிட்டது. சுற்றிச் சுற்றி வந்த சிறுவர்களும் பச்சையும் திண்ணையில் படுத்ததும் உறங்கிப் போகின்றனர். கிழவி படியிலேயே உட்கார்த் திருக்கிறாள்.

பொன்னாச்சிக்கு மனம் அலைபாய்கிறது.

“ஏட்டி? நீ சோறு தின்னிட்டுக் கதவைப் போட்டுட்டுப் படுடி அவெ வருவா, நாலிடம் போவா. வேலையவுட்டு நிக்கிறமின்னா லேசா? பணம் பிரிப்பா...போ! வந்தா கதவத் தட்டுவா, நா இங்ஙனதான இருக்க. ஒறங்க மாட்ட...”

பொன்னாச்சிக்குப் படுத்தால் உறக்கம் பிடித்தால் தானே?

வெகு நேரம் அதையும் இதையும் எண்ணி மனம் அலை பாய்கிறது. பிறகு எழுந்து சென்று பானைச் சோற்றில் நீருற்றி வைக்கிறாள்.

“ஆச்சி, உள்ள வந்து ஒறங்குறியளா?” -

அந்தத் தாய் மறுத்து வாயிற்படியிலேயே சுருண்டு கொள்கிறாள், மிற்றத்தில் நின்று வானைப் பார்க்கையில்,

அங்கு கோடி கோடியாகச் சுடர்கள் இரைந்து கிடக் கின்றன.