பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 கரிப்பு மணிகள்

லாரி அளத்துக்குள்ளார வரக்கூடாது. தொழிலாளிகளே சுமந்து வந்து ஏற்றவேண்டும். அதனால் அவர்களுக்கு அதிக மான வருமானம் கிடைக்கும் என்று வாதிட்ட தொழிலாளர் தலைவனை எப்படிக் கொன்று விட்டார்கள் என்று விவரம் கூறுகிறார்.

திடீரென்று செங்கமலத்தாச்சி பட்டாசு சிறுவது போல

வெடிக்கிறாள்.

“ஒமக்கு அறிவிருக்காவே?’

அந்தக் குரலில் அவர் நடுங்கிப் போகிறார்.

‘கொல்லுற கதையப் போயி இப்ப சொல்லுறிம! தாயமா இருக்கற எதையும் வேரோட கெல்லிற ஏலாது” தெரிஞ்சிக்கும் ஒரு புல்லுக்கூட எடுக்க எடுக்க முளைக்கிது. அந்தவுள்ள கண்ணுல வுசுர வச்சிட்டுப் பாத்திட்டிருக்கி, ஒமக்கு வயசானதுக்கு தயிரியம் சொல்லணும்னு தெரி ,kr_?"*

மாமன் பாவம், உமிழ்நீரை விழுங்கிக் கொள்கிறார். ‘தப்புத்தான், தப்புத்தான். என்னமோ சொல்ல வந்து நெதானமில்லாம பேசிட்ட, மன்னிச்சிக்கும்.

ஒடி வுந்த ஆறு அணை கண்டு முட்டினாற் போன்று திகைத்துப் போகிறார்.

‘பேசத்தான் தெரியும். பேசிட்டே இருப்பிய; எல்லாம் பேசுறான். படிச்சிவ, படியாதவ, தெரிஞ்சவ, தெரியாதவ, ஆம்புள பொம்புள அல்லாம் பேசுறாவ. சினிமால, ரேடியோல தெருவில, கடயில பேச்சு பேசிய ஏமாத்துரானுவ; பேசியே ஏமாந்தும், போறம், செத்துப் போனவப்பத்தி இப்ப என்ன பேச்சு? இருக்கிறவகளப் பத்தி இல்ல இப்ப 5iawI** -

  • செவத்தாச்சி’ என்று குறிப்பிடும் செங்கமலமா? புருசனை விட்ட, தரங்கெட்டுப்போன, மகனைப் பறி கொடுத்த ஒரு பெண் பிள்ளையா?

“நாயம் அம்மா. ஒங்களுக்குத் தெரிஞ்சது எனக்குத் தெரியாமப் போச்சி, மன்னிச்சிக்கும்...’ என்று நெஞ்சம் தழு தழுக்க அவளைக் கையெடுத்துக் கும்பிடுகிறார்.