பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கரிப்பு மணி:ல்

“வாப்பீங்கலே,1 முளியத் தோண்டிப் போடுவ!” என்று அடுத்த வீட்டுச் சாக்குப்படுதாவுக்குள்ளிருந்து ஆகிரோவு. மான குரலுடன், அந்த வீட்டுக்குரியவள் வெளிப்படு கிறாள். o

இருபுறங்களிலும் நெருப்புப் பொறிகள் சீழம் நேரத்தில் மருதாம்பா போய்ச் சேருகிறாள்.

பொன்னாச்சியை மருதாம்பா பார்த்த மாத்திரத்தில் கண்டு கொள்கிறாள். மாநிறம்தான். அப்பனைப் போல் அகன்ற நெற்றி. வட்டமான கண்கள், முடி சுருண்டு அலை யலையாக இருக்கிறது.

குமரவேலு திரும்பிப் பார்க்கிறான். மூலையில் ஏழாங் காயாடிக் கொண்டிருக்கும் வள்ளியும் குஞ்சரியும் எழுந்து: வந்து பார்க்கின்றனர். மாமியும் உற்றுப் பார்த்து, தன் கட்டைக் குரலால், “யாரு?” என்று கேட்டு விழிகளை உயர்த்துகிறாள்.

மருதாம்பா இடுப்பிலிருந்த பையைக் கீழே இறக்குகையில் அதில் பழமும் பனையோலைப் பெட்டியும் இருப்பது தெரி கின்றன. புன்னகை இதழ்களில் மலருகின்றன.

மயினி, என்னத் தெரியலியா? இது பொன்னாச்சிதான ? நா, சின்னாச்சிதா வந்திருக்கிற. அவிய ஒடம்பு வாசியில்ாைம இருக்காவ. சோலியெடுக்கவும் முடியல. நெதமும் பிள்ளை யளப் பார்க்கணும் கூட்டிட்டுவா, கூட்டிட்டு வாண்டு சொல்லிட்டே இருக்காவ...’

மாமி முகத்தில் கையை வைத்துக் கொண்டு அதிசயமாகப் பார்க்கிறாள். அந்தத் தெருவே இந்த அதிசயத்தைக் கண்டு மலைக்கிறது.

  • ஆரு?...இவதா செவந்திக்குச் சக்களத்தியா’ என்று ஈருருவிக் கொண்டிருந்த கிழவி வந்து அவளை உற்றும் பார்க்கிறாள்.

“அப்பெ வந்திருக்கிறானோ?”

இல்ல...’ என்று மருதாம்பா தலையசைக்கிறாள். மாமி சிதம்பர வடிவு கோழியைக் கூடையைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/27&oldid=657503" இலிருந்து மீள்விக்கப்பட்டது