பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 29

வண்டியை ஒட்டிக்கொண்டு வரும் தங்கபாண்டி தன் பட்டாளத்து உப்பை எல்லாம் சேகரித்துக் கொண்டு சென்று மூட்டைக்காரர்களுக்கு விற்பான். உள்ளூரிலும் சிறு வியாபாரம் செய்வான்.

பொன்னாச்சிக்கு அவனிடம் சொல்லவும் விருப்பமில்லை. சொல்லாமல் வெறுங்கையுடன் திரும்பவும். மனமில்லை.

“மாமா திர்நேலி போயிருக்கியா, விட்ட சின்னாச்சி வந்திருக்காவ. மாமி மாமா வந்ததும் தரதாச் சொல்லி கடயில கருப்பட்டியும் காபித்துள்ளும் வாங்கியாரச்சொன்னா அரருவாத் துட்டு வேணும்...”

தங்கபாண்டி ஒரு உல்லாசப் பார்வையுடன் தனது இடுப்பிலிருந்து ஒரு ரூபாய்த்தாளை எடுத்து அவள் விரலைத் தீண்டியபடி வைக்கிறான். - **

அந்தத்துட்டனை எரித்து விடுபவன் போல பார்த்து விட்டு, கையை உதறினாற்பேர்ல் நோட்டை எடுத்துக் கொண்டு அவள் கடைக்கு விரைந்து வருகிறாள். அவன் அவளைக் காணும்போதெல்லாம். இப்படித்தான் சாடைகள், சைகைகள் செய்கிறான். சவம், இனி அவன்தான் இந்த வளரில் இருக்கப் போவதில்லையே!

அவள் காபித்துள்ளும் கருப்பட்டியுமாக வீட்டை நெருங்கு கையில், மாமி வந்தவளிடம் ஒரு பாட்டம் ஆவலாதி பாடிக் கொண்டிருக்கிறாள். = -

“அன்னாடக் கஞ்சிக்கே வாரதில்லே. போன் வருசம் பாதி நாளும் ஏலேலோ கெளங்குதா அவிச்சிக் கஞ்சி குடிச் சோம். மாசம் ரெண்டு திட கெனறு செப்பம் செய்யாம ஏலாது.’

    • sufrif) வரப்பாதையில்லேண்ணா உப்புக்கு ஏதுவெல, ஒடைக்கு மறுகாயில லாரி வரும். வண்டிக்கார உப் பள்ளிட்டுப்போயி அவங்கிட்ட விக்கியா. தமக்குக் குடுப்பது மூடைக்கி முக்கா ருவாதா. மூடை மூனுக்கு வித்தாலும், அஞ்சுக்கு வித்தாலும் முக்கா குவாக்கி மேல. நமக்கு ஒண்னு மில்ல. நூறுநூறான சங்கத்து ஏக்கரில் இவியளப் போல
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/32&oldid=657514" இலிருந்து மீள்விக்கப்பட்டது